வினைகள் தீர்க்கும் சஷ்டி விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வினைகள் தீர்க்கும் சஷ்டி விரதம் பற்றிய பதிவுகள் :

ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டிவரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். 

ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும். 

பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.

கந்தனின் சரித்திரங்களைக் கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும் தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.

இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top