தமிழ் எண் கணித ஜோதிடம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ் எண் கணித ஜோதிடம் பற்றிய பதிவுகள் :

எண்ஜோதிடம் என்பது எண்களுக்கும் வாழ்வின் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் வருங்காலத்தைக் கணிக்கும் ஜோதிடம் ஆகும். 

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன.

தமிழ் எண்கணிதம்

தமிழ் எண்கணிதம் என்பது முழுக்க முழுக்க தமிழ் முறைப்படி எழுதப்பட்ட எண்கணிதம் ஆகும். உலகிலேயே முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் எழுதப்பட்ட எண்கணித முறை தமிழ் எண்கணித முறை ஆகும். இது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும். 

தமிழ் ஒலிகளின் பிறப்பு முறைப்படி அவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஒரே இடத்தில் பிறக்கும் வல்லின, மெல்லின ஒலிகளுக்கு ஒரே மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.

இடையின ஒலிகளுக்கும் ஏவல் வினைகளில் அவற்றின் மாற்றாக வரும் வல்லின ஒலிகளுக்கும் ஒரே மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. 

தமிழரின் காலமுறையான நாழிகைக் கணக்கினை இது அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

தமிழ் எண்கணித முறையானது விண்வெளியின் பால் வீதி மண்டலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கோள்களின் இருப்பு நிலையினை இது முதன்மை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

கோள்களின் பண்பிற்கும் எண்களுக்குமான தொடர்பினை இது துணை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

எண் ஜோதிடம் என்பது ஓர் தனி மனிதனின் பிறந்த தேதிக்கு தகுந்தார் போல் அவருடைய பெயர் எழுத்துக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தபடுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top