ஜோதிட பிரிவுகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஜோதிட பிரிவுகள் பற்றிய பதிவுகள் :

ஜோதிடம் என்பது ஒருவன் பிறந்த கணத்தில் இருந்த கோள்களின் நிலை மற்றும் விண்மீண்களின் அமைப்பினைக் கொண்டு கணக்கிடப்படுவதாகும். 

இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும் உபயோகப்படுவது ஜோதிடம். ஜோதிடத்தில் மொத்தம் பத்து பிரிவுகள் உள்ளன. அவை

வானசாஸ்திர ஜோதிடம் :

வான் மண்டலத்தில் ஏற்படும் பல மாற்றங்களால் பூமியில் ஏற்படும் பருவநிலைகளின் மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள், தட்பவெப்ப நிலைமாற்றங்கள் போன்றவற்றை பற்றி அறிய உதவுகின்றது.

மாண்டேன் ஜோதிடம் :

ஓர் நாட்டின் பொருளாதார நிலை, நாணய மதிப்பு, அரசியல் நிலை, ஏற்றுமதி இறக்குமதியின் நிலை, விலைவாசி கடன், பொது மரணங்கள் போன்றவற்றை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது.

ஜோதிடம் :

ஓர் தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகள், சூழ்நிலைகள் அவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் பல சம்பவங்களைப் பற்றி அறிய பயன்படுகிறது.

எண் ஜோதிடம் :

ஓர் தனி மனிதனின் பிறந்த தேதிக்கு தகுந்தார் போல் அவருடைய பெயர் எழுத்துக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது.

பிரஸ்ஸன ஜோதிடம்:

ஓர் நபர் வந்து ஜோதிடம் பார்க்கும் நேரத்தில் அந்த நேரத்தில் இருக்கும் கிரகநிலையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது.

கைரேகை ஜோதிடம் :

ஓர் தனி நபரின் கைரேகையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும்நன்மை தீமைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒலி அலை ஜோதிடம் :

ஒருவரின் ஒலி அலைகளை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தபடுகின்றது.

சாமுத்திரிக்கா லட்சணம் :

ஒருவரின் முகமைப்பு வைத்தும், உடலமைப்பு வைத்தும் அவர் வாழ்வில்ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது.

கையெழுத்து ஜோதிடம் :

ஒருவர் எழுதும் கையெழுத்தை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன்படுகிறது.

வாஸ்து சாஸ்திரம் :

ஒருவர் வசிக்கும் வீட்டின் அளவுகளை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய உதவுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top