பிரார்த்தனை செய்யும் முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிரார்த்தனை செய்யும் முறைகள் பற்றிய பதிவுகள் :

மனிதர்கள் அனைவருக்கும் அமைந்த சிறப்பியல்புகளில் பிரார்த்தனையும் ஒன்று.
எனக்கு செல்வம் வேண்டும், நான் நன்றாக படிக்க வேண்டும், எனக்கு நோய் நீங்க வேண்டும் என்றெல்லாம் பலரும் தங்களின் பிரார்த்தனைகளை கடவுளிடம் வேண்டுகின்றனர். பிரார்த்தனை என்பது முக்கியமான ஒன்று. நாம் தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது கவனிக்க வேண்டியவை.

நாள்தோறும் சில நிமிடங்களைப் பிரார்த்தனைக்காக ஒதுக்கி வையுங்கள். அப்போது ஒன்றும் பேசாதீர்கள். கடவுளைப் பற்றி மட்டும் நினைக்க வேண்டும்.

உங்கள் மனதில் உள்ளதைக் கடவுளிடம் சொல்லுங்கள். பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும் அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதும் கடவுள் உங்கள் எதிரே இருப்பதாக பாவனை செய்து கொண்டு குட்டிப் பிரார்த்தனைகளை அடிக்கடி செய்யுங்கள்.

எப்போதும் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள். கடவுள் ஏற்கனவே கொடுத்ததற்கு நன்றி செலுத்துங்கள்.

உங்கள் பிரார்த்தனைகள் கடவுளின் அன்பையும் பாதுகாப்பையும் சம்பாதித்து தரும் என்று நம்புங்கள்.

பிரார்த்தனையின் போது கசப்புணர்ச்சியும், பகைமை உணர்ச்சியும் மனதில் தலைதூக்க இடம் கொடுக்காதீர்கள்.

கடவுளிடம் கேட்க வேண்டியதை கேளுங்கள். ஆனால் அவர் கொடுப்பதை பெற்றுக் கொள்ள தயாராக இருங்கள். 
 
கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இயன்றதை செய்யுங்கள். பலன் தருவதும் தராததும் அவர் விருப்பம்.

உங்களை பிடிக்காதவர்களும் உங்களை சரியாக நடத்தாதவர்களும் நலம் பல பெற்று வாழ பிரார்த்தனை செய்யுங்கள்.

குறிப்பாக யார் மற்றவர்களாக பிரார்த்தனை செய்கிறார்களோ அதைவிட அதிகமாக அவர்களுக்கு பலன் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top