தமிழ் மாதமும் பௌர்ணமியும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ் மாதமும் பௌர்ணமியும் பற்றிய பதிவுகள் :

பௌர்ணமி ஒரு முக்கியமான நாள். பௌர்ணமி அன்று கோயில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும். பௌர்ணமி அம்பிகை வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். இந்நாளில் அம்பிகையை வழிப்பட்டால் அனைத்து வளமும் பெறலாம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமிக்கும் ஒரு பலன் உண்டு.

மாத பௌர்ணமி :

சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் பெருமளவில் கிடைக்கும். 

வைகாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் வரன் கிடைத்து திருமணம் நடைபெறும்.

ஆனி மாத பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

ஆடி மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் பெறலாம். 

ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்தால் செல்வம் பெருகும். 

புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி அன்று விரதமிருந்து வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் பெருகும். 

ஐப்பசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் உணவு தானியம் பெருகி, பசிப் பிணிகள் முற்றிலும் நீங்கும்.

கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால், பேரும், புகழும் வளர்ந்து நிலைத்து நிற்கும். 

மார்கழி மாத பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம் கிடைக்கும். உடல் பலம் கிடைக்கும். 

தை மாத பௌர்ணமியில் விரதம் இருந்து வழிப்பட்டால் அனைத்தும் நன்மையும் கிடைக்கும். 

மாசி மாத பௌர்ணமி அன்று விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பம் கிடைக்கும்.

பங்குனி மாத பௌர்ணமி நாளன்று விளக்கேற்றினால், தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும். 

இவ்வாறு தமிழ் மாதங்களில் வரும் பௌர்ணமி நாளில் விளக்கேற்றி விரதமிருந்து வழிபாடு செய்வது நற்பலன்களைத் தந்திடும் என்பது நம்பிக்கை. பௌர்ணமியில் விரதமிருந்து அனைத்து வளமும் நலமும் பெற்று வாழ்வோமாக!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top