பரிகாரம் செய்ய ஏற்ற காலம் மற்றும் இடம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பரிகாரம் செய்ய ஏற்ற காலம் மற்றும் இடம் பற்றிய பதிவுகள் :
 
ஒருவருடைய ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் இருந்தாலோ அல்லது ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அதை நிவர்த்தி செய்து கொள்ள பரிகாரம் செய்கிறோம்.

பரிகாரம் செய்ய ஏற்ற காலம் :

பொதுவாக பரிகாரம் செய்பவருடைய ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது சிறப்பு. எந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்கிறோமோ அந்த கிரகத்தினுடைய கிழமைகளில் செய்யலாம். 

அமாவாசை, பௌர்ணமி திதிகளில் பரிகாரம் செய்யலாம். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பரிகாரம் செய்வது உத்தமம்.

ஜென்ம நட்சத்திரத்திற்கு 4, 8, 12 இந்த நட்சத்திரங்களில் பரிகாரம் செய்யக் கூடாது. மழை பெய்து கொண்டிருக்கும்போது பரிகாரம் செய்யக் கூடாது. சந்தியா காலத்தில் பரிகாரம் செய்யக் கூடாது.

நடு இரவு நேரங்களில் பரிகாரம் செய்யக் கூடாது. பொது கிரக தோஷ பரிகாரங்களை தேய்பிறையில் செய்ய வேண்டும். சூரியன் உச்சிப் பொழுதில் பரிகாரம் செய்யக் கூடாது.

பரிகாரம் செய்ய ஏற்ற இடம் :

• குளக்கரை

• நதிக்கரை

• கிணற்றங்கரை

• கடற்கரை

• அருவிக்கரை

• கோ சாலை

• நாயன்மார்களால் பாடல் பெற்ற சிவலயங்கள்.

• ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட விஷ்ணு ஆலயங்கள்.

• அடியார்கள், மகான்களால் பாடம் பெற்ற அம்மன் திருத்தலங்கள்.

• பாடல் பெற்ற விநாயகர் ஆலயங்கள்.

• சித்தர்கள் சமாதி அடைந்த திருத்தலங்கள்.

• யோகிகள், ஞானிகள் தவம் செய்த இடங்கள்.

• மலை ஸ்தலங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top