சந்திராஷ்டமம் நன்மையளிக்கும் இராசிகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சந்திராஷ்டமம் நன்மையளிக்கும் இராசிகள் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொருவரும் சந்திராஷ்டம நாட்களை நினைத்து மிகவும் பயப்படுகின்றனர். அப்படிப்பட்ட சந்திராஷ்டம நாட்களில் அதிக மன உளைச்சல், பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் சந்திராஷ்டம நாட்களில் சில நன்மைகளையும் கொடுக்கிறது. சந்திராஷ்டம நாள் எந்த இராசிக்கு எப்படி அமையும் என்று பார்ப்போம். 

மேஷம் :

சந்திரன் எட்டில் நீச்சம் பெற்ற நிலையில் இருந்தால், மறைமுக எதிரிகள் வலுவிழந்து போவார்கள். கடன்காரர்களின் தொல்லை இருக்காது. கூட்டாக செய்து வரும் தொழில்களில் லாபம் காணலாம். லாபம்தரும் தொலைதூர பிரயாணங்கள் செய்ய நேரிடும்.

ரிஷபம் :

பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துகள் சேரும். தொழில் முறையில் கடுமையான அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான லாபம் நிச்சயம் கிடைக்கும்.

மிதுனம் :

பொதுவாக அதிக சிரமத்தினை சந்தித்தாலும், அடுத்தவர்களுக்கு உதவி செய்து புகழ் பெறுவர். கடும் பொருளிழப்பினை சந்தித்தாலும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தானம் செய்ய நேரிடும் என்பதால் மற்றவர்களிடையே மிகுந்த நற்பெயர் கிடைக்கும்.

கடகம் :

வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துகள் சேரும். சொந்த பணிகளை விட வாழ்க்கைத் துணையின் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். 

சிம்மம் :

சந்திராஷ்டமத்தால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்றபடி அதிக நன்மையைக் காண்பர். 12-ம் இடத்திற்குடையவனான சந்திரன் எட்டாம் இடத்தில் அமர்வதால் அநாவசிய விரயங்கள், பொருளிழப்பும் தவிர்க்கப்படும்.

கன்னி :

லாப, நஷ்டத்தினை சந்திக்க நேர்ந்தாலும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பிள்ளைகளால் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். போட்டியாளர்களின் தொல்லைகள் குறையும்.

துலாம் :

துலாம் ராசியை பொறுத்தவரை சந்திராஷ்டம நாட்களில் சந்திரன் உச்சம் பெற்று இருப்பார். அன்றைய தினம் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்ற வகையில் மிகுந்த நன்மை காண்பர். வாகனங்கள் மற்றும் பிரயாணங்களில் ஆதாயம் உண்டாகும். 

விருச்சிகம் :

வீண் பழிகளை சுமக்க நேரிடுவதால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்த்து நோக்கினால் போட்டியாளர்கள் வகுக்கும் திட்டங்களைப் புரிந்து கொள்வர். அன்றைய தினத்தில் செயல்பட முடியாது போனாலும் வெற்றிக்கான வழிகளை அறிந்து கொள்ள முடியும்.

தனுசு :

செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் உண்டாகுமே தவிர வேறு பாதிப்புகள் ஏதும் நேராது. கூட்டுத் தொழிலில் நல்ல தன லாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துகள் சேரும்.

மகரம் :

வாழ்க்கைத் துணையின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். பூர்விக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கூட்டுத் தொழிலில் நன்மை தரும். எதிரிகளால் உண்டாகும் போட்டியினை சமாளித்து வெற்றி காணும் திறன் உண்டாகும்.

கும்பம் :

சந்திராஷ்டமத்தால் அதிக நன்மை அடைபவர்கள் இவர்களே. ஆறாம் இடத்திற்குரியவர் எட்டில் அமர்வதால் ஆறாம் இடம் வலுவிழப்பார்கள். வழக்குகள் சாதகமான முடிவைத் தரும். கடன் சுமை குறையும். நோய்களின் தாக்கம் குறையும்.

மீனம் :

பிள்ளைகளின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். கூட்டு முயற்சிகள் வெற்றியைத் தரும். கடன்சுமை குறையும், தொழில் முறையில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top