மதுரை அவனியாபுரம் வாடிவாசல் அருகே இருக்கக்கூடிய கோவில் தான் கல்யாணசுந்தரேஷ்வர் திருக்கோவில். இக்கோவில் மிகவும் பழமையான கோவில் ஏனென்றால் கிபி ஆறாம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
இக்கோவிலின் மூலவராக கல்யாணசுந்தரேஸ்வரரும் தாயார் மீனாம்பிகை மக்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். குழந்தை பருவத்தில் மீனாம்பிகை அதாவது மீனாட்சி தனது தோழியுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்த இடமாக இந்த கோவில் உள்ளது என்று கூறப்படுகின்றது.
அதேபோல் பருவ வயதில் சுந்தரேஸ்வரரை மனம் முடித்து சென்ற போது தோழியர்கள் கேட்டுக் கொண்டதால் மனக்கோளத்தில் கணவருடன் காட்சியளிக்கும் இடமாக இந்த கோவில் தற்பொழுது உள்ளது என்று வரலாறு உள்ளதாக சொல்லப்படுகின்றது.
கோவிலின் தலவிருட்சமாக வில்வ மரம் ஒன்று உள்ளது இக்கோவிலில் இருக்கக்கூடிய சந்தன விநாயகரை வழிபட்டு வந்தால் தாய் மற்றும் பிள்ளைகள் இடையே சண்டை நீங்கி மகிழ்ச்சி ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
அதேபோல் இங்குள்ள பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரரை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கக் குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும். தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ரிண விமோசன பைரவரை வணங்கி வந்தால் தரித்திரம் வீடுகள் அகலும் என்றும், குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கும், வழக்குகளில் வெற்றி உண்டாகும் எனவும் நம்பப்படுகிறது.
கோவிலின் தெற்கு பகுதியில் பெரியதாக நந்தி சிலை ஒன்றும் உள்ளது. தமிழ் புத்தாண்டு ஆடிப்பெருக்கு பிரதோஷம் சிவராத்திரி போன்ற தினங்களில் இக்கோவிலில் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
மேலும் இக்கோவில் நாயக்கர் ஆட்சி காலத்தில் மன்னர் திருமலை நாயக்கர் மன்னரால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.