மலர்களும் நட்சத்திர பரிகாரங்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மலர்களும் நட்சத்திர பரிகாரங்களும் பற்றிய பதிவுகள் :

27 நட்சத்திரங்களில் ஒரு சில நட்சத்திர நாட்களில் சில காரியங்களுக்கு செல்லும்போது தடைகள் ஏற்பட வாய்ப்யபுகள் உள்ளது. அப்படிப்பட்ட நட்சத்திர நாட்களில் எந்த பூக்களை கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

அஸ்வினி நட்சத்திரத்தன்று சூரியகாந்தி பூவைக் கொண்டு சூரிய பகவானை வணங்கிவிட்டு தன்னைவிட உயர்ந்தவர்களை அல்லது உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று முருங்கை மலர்களால் சிவபெருமானுக்கு வழிபாடு செய்து, அதில் சில மலர்களை கையில் எடுத்துக் கொண்டு வாகனங்கள் வாங்கச் சென்றால் மேன்மேலும் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். மாடு, குதிரை போன்ற கால்நடைகள் வாங்கினாலும் மேன்மேலும் பொருட்கள் சேரும்.

அஸ்தம் நட்சத்திரத்தன்று தாழம்பூவைக் கொண்டு, அதன் முனை மேல் நோக்கியவாறு பார்வதியை அர்ச்சித்துவிட்டு பொன் வாங்குவதற்கும், பெண் பார்ப்பதற்கும் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

அனுஷம் நட்சத்திரத்தன்று மாம்பூவினால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு மிஞ்சுகின்ற பூக்களைக் கையுடன் எடுத்துச் சென்று இரும்பு இயந்திரங்கள், தளவாடச் சாமான்கள், அச்சு எந்திரங்கள் முதலியவை வாங்கினால் அவைகள் பலவிதமாக பெருகி தொழிலை நன்கு வளர்ச்சியுறச் செய்யும்.

 திருவோணம் நட்சத்திரத்தன்று பவளமல்லிகையில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம். நிலம், வீடு வாங்கச் சென்றால் வெற்றி நிச்சயம்.

அவிட்டம் நட்சத்திரத்தன்று அகத்தி மலர்களால் முருகனுக்கு அர்ச்சனை செய்து விட்டு பயணங்கள் செய்தால், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு விபத்துகள் ஏற்படாது.

பூசம் நட்சத்திரம் வரும் நாட்களில் சாமந்திப் பூவை கொண்டு பெருமானை, பூஜித்து வந்தால் நோய் நொடிகளிலிருந்து விடுபடலாம்.

மூலம் நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல், செம்பருத்தி இவைகளைக் கொண்டு விநாயகரை வழிபட்டால் காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி முடியும்.

எண்ணிய காரியங்கள் வெற்றி அடைய மேற்கூறிய நட்சத்திர நாட்களுக்கான பூக்களை பயன்படுத்துங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top