நினைத்த காரியம் நிறைவேற செய்ய வேண்டிய அபிஷேகங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நினைத்த காரியம் நிறைவேற செய்ய வேண்டிய அபிஷேகங்கள் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொருவரும் இறைவனிடம் சென்று அவரவர் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்வர். அவ்வாறு இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக வழிபாட்டிற்கும் சிறப்பு பலன்கள் உள்ளது. 

வேண்டுதல்கள் நிறைவேற இறைவனுக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்கள் பற்றியும், அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் பார்ப்போம்.

நினைத்த காரியம் நிறைவேற வலம்புரி சங்கினால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வேண்டுமென்றால், இறைவனுக்கு தங்கத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் பிணிகள் நீங்கி, நீண்ட ஆயுளைப் பெறலாம்.

உடலும், உள்ளமும் வலிமை பெற, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். 

இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமென்றால், இறைவனுக்கு பன்னீர் மற்றும் சந்தனம் ஆகிய இரண்டையும் கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

இறைவனுக்கு தயிரால் அபிஷேகம் செய்தால் நல்ல குழந்தைகளைப் பெறலாம்.

இல்லத்தில் சுகத்தையும், சுபிட்சத்தினையும் பெற வேண்டுமாயின், இறைவனுக்கு சந்தன தைல அபிஷேகம் செய்ய வேண்டும்.

இனிமையான குரலைப் பெறுவதற்கு தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

தீராத கடன் மற்றும் நோய் தீர, இறைவனுக்கு திருமஞ்சனப் பொடியால் அபிஷேகம் செய்ய வேண்டும். 

நோய்கள் தீர, இறைவனுக்கு கரும்பு சாறினால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

நீண்ட நாள் பகை அழிய வேண்டும் என்று நினைப்பவர்கள், இறைவனுக்கு எலுமிச்சை சாறினால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இன்பமான வாழ்வினை பெற விரும்புபவர்கள், இறைவனுக்கு இளநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இறைவனுக்கு நெய்யால் அபிஷேகம் செய்தால் முக்தி கிடைக்கும்.

வாழ்வில் சுகபோகங்களையும், மோட்சத்தையும் பெற விரும்புபவர்கள், இறைவனுக்கு விபூதியைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top