யோகங்களும் அதற்கான பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிறந்த யோக பலன்கள் பற்றிய பதிவுகள் :

ஒருவர் பிறந்த ஜாதகத்தை வைத்து இராசி நட்சத்திரங்கள் குறிக்கப்படுகிறது. அதேபோல் ஒருவர் பிறந்த யோகத்தை வைத்து அதற்கான பலன்களை காணலாம்.

யோகங்களும் அதற்கான பலன்களும் :

1. விஷகம்பம் - வெற்றியாளர், செல்வந்தர்.

2. ப்ரீதி - பெண்கள் வசமாவர்.

3. ஆயுஷ்மான் - நீண்ட ஆயுள் உடையான்.

4. சௌபாக்கியம் - மட்டற்ற மகிழ்ச்சியும், மங்கள வாழ்வும் உடையவர்கள்.

5. சோபனம் - காமா இச்சையுடையவர்.

6. அதிகண்டம் - கொடிய செயல், கொலை வெறிமிக்கவர்.

7. சுகர்மம் - தனவான், நல்லவன்.

8. திருதி - கொடூர குணமுடையவன்.

9. சூலம் - முன்கோபி, சண்டையிடும் மனோபாவம்.

10. கண்டம் - நாச வேலையில் ஈடுபடுபவன்.

11. விருத்தி - பேச்சாற்றல் மிக்கவர்.

12. துருவன் - குபேரனுக்கினையான செல்வந்தன்.

13. வியாசதம் - கொடிய செய்கையுடையான்.

14. அரிணம் - புத்திமான், பிரபலமானவன்.

15. வஜ்ஜிரம் - தனவான்.

16. சித்தி - பிரபுத்வம், பலரை ஆதரிப்பவன்.

17. வியாதிபாதம் - தீய எண்ணம், மோசக்காரன்.

18. வரியான் - காமாந்தகன், தீய வழியில் செல்பவன்.

19. பரீகம் - தனவந்தன், அடாவடித்தனம் நிறைந்தவன், போக்கிரி.

20. சிவம் - வேத சாஸ்திர ரூடவ்டுபாடு, தயாளகுணம்.

21. சித்தம் - யாகம், ஹோமம் நடத்துபவன். உத்தமன்.

22. சாத்யம் - நேர்மை வழியில் செல்பவன்.

23. சுபம் - தனவந்தன், சுகபோகி, அழகியவதனன்.

24. சுகபிரமம் - சொல்வீரன், நன்னடத்தை உள்ளவன்.

25. பிரம்மம் - ரகசியம் பாதுகாப்பவன், பதவி உயர்வு பெறுவதில் கவனம், கொடைவள்ளல்.

26. அயீந்திரம் - சகலகலா வல்லவன், தனவந்தன்.

27. வைதிருதி - தந்திரசாலி, பலசாலி, தனவந்தன், பிறரை பழிப்பவன்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top