இந்த பிரபஞ்சத்தில் மொத்தம் 14 உலகங்களை இறைவன் படைத்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு உலகங்களிலும் ஒருவர் வசிக்கின்றனர்.
இந்த பூமியில் வாழும் மக்களாகிய நமக்கு ஒரே ஒரு உலகம் தான். ஆனால் தெய்வ சக்திகளுக்கு 14 உலகங்கள். அதை தெரிந்து கொள்வோம்.
சத்தியலோகம் - பிரம்மன்
தபோலோகம் - தேவதைகள்
ஜனோலோகம் - பித்ருக்கள்
சொர்க்கம் - இந்திரன் மற்றும் தேவர்கள்
மர்லோகம் - முனிவர்கள்
புனர்லோகம் - கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்
பூலோகம் - மனிதர்கள், விலங்குகள்
அதல லோகம், விதல லோகம் - அரக்கர்கள்
சுதலலோகம் - அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி
தலாதல லோகம் - மாயாவிகள்
மகாதல லோகம் - புகழ்பெற்ற அசுரர்கள்
பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்புகள்
ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள்
ஒவ்வொரு உலகிலும் வாழ்பவர்களை பற்றி தெரிந்து கொள்வது மனிதருக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இறைவன், தேவர்கள், அசுரர்கள் எந்த உலகில் வாழ்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வது ஆன்மீக சிந்தனையை வளர்க்க உதவும்.