நாகதோஷம் என்பது முன் ஜென்மத்தில் நாகத்தினை துன்புறுத்தியிருந்தால், அல்லது நாகத்தினை அடித்திருந்தால், நாகங்களுக்கு இடையுறாக இருந்திருந்தால் தோஷம் ஏற்படுவது.
நாகதோஷம் இருப்பவர்களுக்கு திருமணத் தடை ஏற்படும். நாகத்தோஷத்தால் திருமணத் தடை ஏற்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்வதன் மூலம் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
நாகதோஷ பரிகார தலங்கள் :
அருள்மிகு நாகராஜ திருக்கோவில், நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.
இது நாகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஆகும். இங்குள்ள மூலவர் சுயம்பு வடிவான நாகராஜர். இங்கு பால் ஊற்றி வழிபாடு செய்தால் நாகதோஷம் மற்றும் திருமணத்தடை அகலும்.
அருள்மிகு காளத்தி நாதர் திருக்கோவில், காளஸ்தி.
இக்கோவில் சிவனுடைய பஞ்ச பூத ஸ்தலமாகும். இது வாயு ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சென்று முறைப்படி பூஜை செய்ய நாகதோஷம் விலகும்.
அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோவில் திருநாகேஸ்வரம், கும்பகோணம்.
இங்கு ராகு காலத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வது மிகவும் விசேஷம்.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் சென்னை, வில்லிவாக்கம்
இங்கு கோவிலுக்கு வெளியே உள்ள திருக்குளத்திற்கு எதிரில் உள்ள அரச மரத்தின் அடியில் வீற்றிருக்கும் நாகராஜர் சிலை மற்றும் செவ்வாய் சிலைக்கு முறையாக பரிகாரம் செய்ய நாகதோஷமும், செவ்வாய் தோஷமும் விலகும்.
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீபெரும்புதூர்.
இங்குள்ள ஆனந்தசரஸ் தீர்த்தக் குளத்தில் நீராடி பெருமாளை வழிபட நாகதோஷம் நீங்கும். இங்குள்ள இந்த குளம் அனந்தன் என்ற சர்ப்பத்தினால் உண்டாக்கப்பட்டது.
அருள்மிகு நாகநாதர் திருக்கோவில் பேரையூர், புதுக்கோட்டை
இங்கு நாகர் சிலை அடித்து பூஜை செய்ய வேண்டும். இங்கு ஆயிரக்கணக்கான நாகர்கள் பரிகாரத்திற்காக வைக்கப்பட்டுள்ளன.
அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவில், மதுரை
இங்கு எழுந்தருளியுள்ள பதஞ்சலி மகரிஷியை வணங்கி வழிபட நாகதோஷம் நிவர்த்தியாகும்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
மலையின் அடியில் 60 அடி நீளம் கொண்ட 5 தலை நாகத்தின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இது ஆதிசேஷன் மலை என்றும் அழைக்கப்படும். சதய நட்சத்திரத்தன்று, இக்கோவிலுக்கு சென்று ஆதிசேஷனை வழிபட்ட அர்த்தநாரீஸ்வரை வணங்குவது சிறப்பு. சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
நாகதோஷம், ராகுதோஷம், காளசர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.