சிறப்பான பலன்களை அள்ளித்தரும் வழிபாடுகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிறப்பான பலன்களை அள்ளித்தரும் வழிபாடுகள் பற்றிய பதிவுகள் :

யோக கௌரி :

யோகக்கலையின் அம்சம் இவர் என்பதால், முனிவர்களும், சித்தபுருஷர்களும் கொண்டாடிய தேவி இவர். சிவன், சித்தர் வடிவம் கொண்டபோது, யோக கௌரியாக உடன் வீற்றிருந்தவர் இவரே. 

திருவாரூர் கமலாம்பிகை, யோகாம்பிகை என்றே அழைக்கப்படுகிறார். யோகம் ஆழ்ந்த நம்பிக்கையை அளிக்கும். எனவே, இவரை வணங்கினால் அமைதி கிடைக்கும்.

வஜ்ரச்ருங்கல கௌரி :

உறுதியான உடலைத் தரக்கூடிய தேவி இவர். வஜ்ரதேகத்தை வரமாகத் தருபவர். கருட வாகனத்தில் வலம் வருபவர். ஸ்ரீதுர்க்கை, இவரின் அம்சமாக போற்றப்படுகிறார். நோய்கள் அண்டாமல் இருக்க வணங்க வேண்டிய அன்னை இவர்.

சுயம்வர கௌரி :

பதிவிரதைகளின் நாயகி என்றே இவர் கொண்டாடப்படுகிறார். நல்ல கணவரை அடைய வழிகாட்டும் அன்னை இவர். சதிசாவித்ரி, ருக்மணி, சீதாதேவி ஆகியோர் வழிபட்ட கௌரி இவர். சுயம்வர கௌரியும் கடும் தவமிருந்தே ரூடவ்சனை மணந்தார் என்பதால், காமாட்சி இந்த கௌரியின் அம்சமானவர்.

திரிலோக்ய மோன கௌரி :

உற்சாகம் வேண்டுவோருக்கு இந்த கௌரி வரங்களை வாரி வழங்குவார். உறுதியாக செயலாற்றும் எவருக்கும் இவர் ஆசிகளை வழங்கிக் காக்கிறார். புதிய செயல், புதிய தொழில் தொடங்குவோர், இவரை வணங்கி ஆரம்பிக்க சுபம் உண்டாகும். வரலட்சுமியின் அம்சம் இவர்.

கஜ கௌரி :

கணபதியை மடியில் வைத்துக்கொண்டு அருளும் இந்த கௌரி, பிள்ளை வரம் அருளும் மாசக்தி. ஆடி மாத பௌர்ணமியில் விரதமிருந்து இவரை வணங்க, சந்தான பாக்கியம் கிட்டும். சீர்காழியில் உறையும் திருநிலை நாயகி, கஜ கௌரியின் அம்சமாக வணங்கப்படுகிறார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top