எந்தக் கிழமையில் எதை செய்தால் வெற்றி கிடைக்கும்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து எந்தக் கிழமையில் எதை செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது பற்றிய பதிவுகள் :

மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். 

இந்த ஆசைகள் நிறைவேறுவதற்கு கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. முக்கியமான செயல்களை செய்யும் முன்பு அதற்குரிய நாட்களை தேர்வு செய்து அந்த நாளில் அதை செய்யவேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது. 

அந்த வகையில் எந்தக் கிழமையில் எந்த செயல்களை செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமை :

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வணங்கி விட்டு செயல்களை தொடங்கினால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம்.

இந்த கிழமையில் சுப காரியங்களை தொடங்குவது, புதிய பதவியை ஏற்பது, புதிதாக வாகனங்களை வாங்குவது, வீட்டில் ஹோமம் வளர்ப்பது, கிரகப்பிரவேசம் செய்வது, விவசாயிகள் புதிய விதை விதைப்பது போன்ற செயல்களை செய்வது சிறந்த பலன்களைத் தரும்.

திங்கட்கிழமை :

இந்த கிழமையில் சிவபெருமானையும், ஸ்ரீமஹாலட்மியையும் வணங்கிவிட்டு செயல்களை தொடங்கினால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம்.

திங்கட்கிழமையில் மாங்கல்யம் செய்வதற்கு கொடுப்பது, வர்த்தகம் சம்பந்தமான செயல்களைத் தொடங்குவது, விவசாயிகள் கிணறு வெட்ட ஆரம்பிப்பது போன்றவற்றை செய்வது சிறந்தது.

செவ்வாய்க்கிழமை :

இந்த கிழமையில் முருகப்பெருமானையும், சக்திதேவியையும் வணங்கிவிட்டு செயல்களை தொடங்கினால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம்.

இந்த நாளில் வாகனங்களுக்கு பூஜை போடுவது, சாகச கலைகளை கற்க ஆரம்பிப்பது போன்றவற்றை செய்யலாம்.

புதன்கிழமை :

இந்த கிழமையில் மகான்களையும், தேவர்களையும் வணங்கிவிட்டு செயல்களை தொடங்கினால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம்.

புதன்கிழமை புதிய கல்வி கற்க தொடங்குவது, புதிய வாகனங்களை ஓட்ட ஆரம்பிப்பது, மாங்கல்யம் செய்ய ஆரம்பிப்பது போன்றவற்றை செய்யலாம்.

வியாழக்கிழமை :

இந்த கிழமையில் மகாவிஷ்ணுவை வணங்கிவிட்டு செயல்களை தொடங்கினால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம்.

மேலும், இந்த கிழமையில் வேதம் கற்க தொடங்குவது, குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது, வீட்டிற்கு புதிதாக கடவுள் படங்களை வாங்குவது, வீட்டில் போர் போடுவது, புதிதாக தியானம் பழகுவது போன்றவற்றை செய்யலாம்.

வெள்ளிக்கிழமை :

இந்த கிழமையில் துர்க்கை அம்மனை வணங்கிவிட்டு செயல்களை தொடங்கினால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம்.

மேலும், குழந்தையைத் தொட்டிலில் போடுவது, குழந்தைக்கு முதல் முறையாக சோறு ஊட்ட தொடங்குவது, குழந்தைக்கு காது குத்துவது, சுமங்கலி பூஜை செய்வது, வளைகாப்பு நடத்துவது போன்றவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு.

சனிக்கிழமை :

இந்த கிழமையில் அனுமனை வணங்கிவிட்டு செயல்களை தொடங்கினால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம்.

மேலும், வீட்டிற்கு வளர்ப்பு பிராணிகளை வாங்குவது, குருவிடம் தீட்சை வாங்குவது, இரும்பு சார்ந்த பணிகளைத் தொடங்குவது போன்றவற்றை சனிக்கிழமைகளில் செய்வது மிகவும் சிறந்தது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top