பஞ்சாங்கம் பற்றிய சிறு விளக்கங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பஞ்சாங்கம் பற்றிய சிறு விளக்கங்கள் :

நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர் பஞ்சாங்கம். 

திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். 

நீண்ட ஆயுளைப் பெறவேண்டுமானால் நாட்களை அடிப்படையாக வைத்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 

பாவங்கள் அகல வேண்டுமானால் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

நோய்கள் தீர வேண்டுமானால் யோகத்தை அடிப்படையாக வைத்து வழிபட்டு வர வேண்டும். 

காரிய வெற்றி ஏற்பட வேண்டுமானால் கரணங்களையும், நட்சத்திரத்தையும் அடிப்படையாக வைத்து வழிபட வேண்டும்.

இவ்வாறு திதி, நாள், யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். 

ஐந்திற்கு இரண்டு பழுதில்லை என்பர். நாள் நட்சத்திரம் இரண்டும் நமக்கு அனுகூலமாக ஒன்று கூடும் நேரத்தில் செய்யும் வழிபாடு உடனடியாகப் பலன் தரும்.

நாட்கள் :

1. ஞாயிறு,
2. திங்கள்,
3. செவ்வாய்,
4. புதன்,
5. வியாழன்,
6. வெள்ளி,
7. சனி.

திதிகள் :

1. பிரதமை,
2. துவிதியை, 
3. திரிதியை, 
4. சதுர்த்தி, 
5. பஞ்சமி, 
6. சஷ்டி, 
7. சப்தமி, 
8. அஷ்டமி, 
9. நவமி, 
10.தசமி, 
11. ஏகாதசி, 
12. துவாதசி, 
13. திரையோதசி, 
14. சதுர்த்தசி,
15. பௌர்ணமி அல்லது அமாவாசை.

யோகம் :

1. விஷ்கம்பம்,
2. ப்ரீதி,
3. ஆயுஷ்மான்,
4. சவுபாக்கியம்,
5. சோபனம்,
6. அதிகண்டம்,
7. சுகர்மம்,
8. திருதி,
9. சூலம்,
10. கண்டம்,
11. விருத்தி,
12. துருவம்,
13. வியாகாதம்,
14. அரிசனம்,
15. வச்சிரம்,
16. சித்தி,
17. வியதீபாதம்,
18. வரியான்,
19. பரிகம்,
20. சிவம்,
21. சித்தம்,
22. சாத்தியம்,
23. சுபம்,
24. சுப்பிரம்,
25. பிராம்மம்,
26. மாஹேத்திரம்,
27. வைத்திருதி.

கரணம் :

1. பவம், 
2. பாலவம்,
3. கௌலவம்,
4. தைதுலை,
5. கரசை,
6. வணிசை,
7. பத்திரை,
8. சகுனி,
9. சதுஷ்பாதம்,
10. நாகவம்,
11. கிம்ஸ்துக்னம்.

நட்சத்திரங்கள் :

1. அசுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீரிடம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top