அகஸ்தியர் கூறிய குளியல் முறைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அகஸ்தியர் கூறிய குளியல் முறைகள் பற்றிய பதிவுகள் :

நாம் குளிக்கும் நீரை எப்படி புனித கங்கை நீராக்கிக் குளித்து, இறைவனின் அருளைப் பெறுவது என அகஸ்தியர் கூறியுள்ளார்.

குளிக்கும் போது நாம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று குளிக்க வேண்டும். இந்த இரு திசைகளும் உத்தம திசைகள் எனப்படும். நாம் கர்மம் செய்த பின் அல்லது மயானம் சென்று வந்தால் மட்டுமே தெற்கு நோக்கி நின்று குளிக்க வேண்டும். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் வலி அதிகரிக்கும்.

கங்கா ஸ்நானம்

ஒவ்வொருவரும் வீட்டிலேயே கங்கா ஸ்நானம் செய்ய முடியும். நீங்கள் குளிக்கும் முன், அதில் சிறிது நீரை கையில் எடுத்து கீழ் குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்தால் அந்த நீர் கங்கை நீராக மாறிவிடும்.
 
"கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு"

குளிக்கும் முறை:

பொதுவாக நாம் குளிப்பதற்கு முக்கிய காரணம் நம் உடலில் இருக்கும் அசுத்தங்களை போக்குவதற்கு மட்டுமின்றி, நம் உடலில் இருக்கும் அதிக வெப்பத்தை போக்குவதற்காகவும் தான். 

அக்னி பொதுவாக கீழிருந்து மேலாக எரியும். அந்த வகையில் நாம் குளிக்கும் போது ஓம் என எழுதி இறைவனை வணங்கிய உடன் சிறிது நீரை தலையில் தெளித்துக் கொள்ளவும். தண்ணீரை நம் கால் முதல் மேல் உடல் நோக்கி மெதுவாக நனைத்து வந்து கடைசியில் தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இப்படி செய்வதால் உடலில் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் நோக்கி பயணிக்கும். நம் மண்டை ஓட்டுக்கு மட்டும் தான் எப்படிப்பட்ட வெப்பத்தையும்., அக்னியின் வேகத்தையும் தாங்கும் சக்தி உண்டு.

தலையில் சிறிது தண்ணீர் தெளித்துள்ளதால் தலைக்கு வெப்பம் தாக்காமல், நம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் கண் மற்றும் காது வழியாக வெளியேறும்.

வாயில் நீர் வைத்திருத்தல்:

அதே போல் குளிக்கும் போது வாய் நிறைய எவ்வளவு நீர் வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் உடலில் மேலெழும் வெப்பம் சாந்தப்படுத்தப்பட்டு, தலையை தாக்காமல் இருக்கும். குளித்து முடிக்கும் தறுவாயில் அந்த நீரை துப்பிவிடவும்.

குளித்த பின்:

தலை முதல் கால் வரை உள்ள உடல் பாகத்தில் நம் முதுகுப்பகுதியான ‘பிரஷ்டம்’ தான் மிகப்பெரியது. இங்கு தான் அக்னியின் வேகம் கூடுதலாக பரவும். இதனால் குளித்து முடித்த உடன் இந்த பகுதியைத் தான் முதலில் துடைக்க வேண்டும்.

நனைக்கப்பட்ட துண்டு

நம்மில் பெரும்பாலும் குளித்த பின்னர் உலர்ந்த துண்டு தான் துவட்டப் பயன்படுத்துவோம். ஆனால் அது சரியான முறையல்ல. குளிக்கும் நீரிலேயே நாம் துவட்டும் துண்டை நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உகந்தது. 

உலர்ந்த துண்டு பயன்படுத்தி துவட்டுவதால் நம் உள் சூட்டை வேகமாக பரவச் செய்யும். இதனால் உடலில் உள் வலிகளை ஏற்படுத்தும்.

பேசக்கூடாது:

நாம் வாய்திறந்து பேசக்கூடாத மூன்று முக்கிய நேரங்களில் ஒன்று குளிக்கும் நேரம். இந்த நேரத்தில் மெளனமாக மனதில் இறைவனை ஜெபிப்பது நல்லது.

குளிப்பதன் மூலம் ஐம்புலன்கள் செய்த தவறுகளினால் நாமக்கு ஏற்பட்ட கர்மாக்காள் களையப்படுகிறது.

நீர் நிலைகளில் குளிக்கும் முறை:

வீட்டில் தவிர குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் தேவர், தேவதைகள், மகான்கள், பெரியவர்கள் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறப்படுகிறது.

‘நாரம்’ எனப்படும் தண்ணீரில் நாராயணம் வாசம் செய்கின்றான். அதனால் நீர் நிலைகளில் ஓடிச் சென்று குதிக்காமல், கரையில் நின்று சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்த பின்னர், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில், நீர் கலங்காமல் மெதுவாக இறங்கி குளிக்க வேண்டும்.

அதே போல் நீரில் காரி உமிழ்வதும், துப்புவதும் கூடாது. ஏனெனில் நீரின்றி ஒரு உயிரினமும் கிடையாது. இதனால் நீரை விரயம் செய்வது கூடாது. கடன் அதிகரிக்கும்.

உப்பு நீரில் குளிப்பதால் நம் திருஷ்டி, தோஷங்கள் அறுக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top