ஒரு மனிதன் செல்வ செழிப்புடனும் செல்வாக்கூடனும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடனும் வாழ வேண்டும் எனில் அவனுக்கு கண்டிப்பாக சுக்கிர பகவானின் அனுகிரகம் தேவை.
அந்த சுக்கிர பகவானின் அனுகிரகத்தை முழுவதுமாக பெற வேண்டுமெனில் அவருக்கு உகந்த பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதே போல் மகாலட்சுமி தாயாரையும் வணங்க வேண்டும். சுக்கிர பகவானின் அதிதேவதியானவர் மகாலட்சுமி தாயார்.
சுக்கிரன் அனுகிரகம் பெற வாராகி வழிபாடு :
வாராகி அன்னையின் வழிபாடு எனில் அது பஞ்சமி திதி தான் உகந்தது. ஆனால் சுக்கிரனுடைய அனுகிரகத்தை பெற வேண்டுமெனில் சுக்கிரனுக்கு உகந்த நாளில் தான் செய்ய வேண்டும்.
சுக்கிர பகவானுக்கு உகந்த நாள் எனில் அது வெள்ளிக்கிழமை தான். அதே போல் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளும் வெள்ளிக்கிழமை தான்.
இந்த நாளில் மகாலட்சுமி தாயார் சுக்கிரன் இருவருடைய அனுகிரகத்தையும் பெற வாராகியை நாம் வழிபடலாம் அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் இதை செய்வது சிறந்தது. வாராகி அன்னை வழிபடுவதால் மாலை நேரத்தில் வரும் சுக்கிர ஹேரையில் செய்வது மேலும் சிறப்பு.
இதற்கு ஒரு கைப்பிடி அளவு மொச்சையை ஊற வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மொச்சையுடன் தேன் கலந்து அதை வாராகி அன்னைக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
அதே போல் மகாலட்சுமி தாயார் திருக்கரங்களில் இருக்கக் கூடிய தாமரை மலரை வாராகி அன்னைக்கு சூட்ட வேண்டும். ஒரே நேரத்தில் சுக்கிரன், தாயார் இருவருக்கும் உகந்த பொருட்களையும் தாயாருக்கு வைத்தாகிவிட்டது.
அதன் பிறகு வாராகி அன்னைக்கு உகந்த பஞ்ச தீபத்தையும் ஏற்றி வைக்க வேண்டும். சாம்பிராணி கற்பூர ஆரத்தி போன்றவற்றை காட்டுங்கள்.
இந்த பூஜை நேரத்தில் வாராகி அன்னையின் மந்திரங்கள் உங்களுக்கு எது தெரியுமோ அதை பாராயணம் செய்யலாம். அப்படி இல்லாத பட்சத்தில் மகாலட்சுமி மந்திரம் அஷ்டோத்திரம் இப்படி ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்யுங்கள்.
இந்த ஒரு வழிபாட்டை வெள்ளிக்கிழமை தோறும் தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் குடும்பத்தில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருக்கும். கடன் தொல்லை பண பிரச்சனை போன்றவை உங்களை நெருங்கக் கூட முடியாது.
சுக்கிரனின் அருள் ஆசி முழுவதுமாக கிடைக்கும், தாயாரின் அனுக்கிரகம் கிடைக்கும் வாராகி அன்னையின் அருளாசி கிடைக்கும்.
இப்படி அனைத்து நலன்களையும் ஒரு சேர அருளக் கூடிய இந்த வழிபாட்டை அனைவரும் செய்து சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.