11.03.2024 - திங்கட்கிழமை மாலை மூன்றாம் பிறை அன்று சந்திரபகவானை தரிசனம் செய்தால் நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.
பொதுவாகவே மூன்றாம் பிறை அன்று சந்திர தரிசனம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும். அனைத்து பிரச்சனைகளுக்கும் சுலபமாக தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறது நம்முடைய ஜோதிட சாஸ்திரம்.
இன்றைய தினம் உங்களால் முடிந்தால் கஷ்டப்படும் ஒருவருக்கு தான - தருமம் செய்யலாம். இன்றைய தினத்தில் செய்யப்படும் தானமானது பல மடங்கு பலனைத்தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆயிரம் முறை சந்திர தரிசனம் அதாவது மூன்றாம் பிறை தரிசனம் செய்து வந்தால் முக்தி கிடைக்கும் என்று நமது சமய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் இந்த சந்திர தரிசன தினத்தில் பிறை வழிபாடு செய்து எல்லோரும் நற்பலனை பெற வேண்டும் என்று மனமார பிரார்த்திக்கிறேன்.
சந்திரன் துதி:
ஓம் ஷ்ராம் ஸ்ரீம்
ஷ்ரௌம் சஹ:
சந்திரமஸே நமஹ
ஓம் வளர்பிறை நிலவோனே
வளம் தரும் நாயகனே
அருள்தரும் சந்திரபகவானே
உந்தன் தாமரை மலர் பாதம்
போற்றி வணங்குகிறோம்.