தயிர் அபிஷேக பலன்:
வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம்.
நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.
நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:
பெண்கள், சுமங்கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.
சந்தனம் அபிஷேக பலன்:
மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.
ஸ்வர்ண அபிஷேக பலன்:
பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.