பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12 ஆம் மாதம் பங்குனி.
இந்த பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திரம் என்பதால் விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும்.
விரதம் இருக்கும் முறைகள் :
பங்குனி உத்திரம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முகப்பெருமானை வணங்க வேண்டும்.
அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்க வேண்டும்.
அப்படி படிக்க முடியாதவர்கள் ‘ஓம் சரவண பவ’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.
அன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல், நலம் பாதிக்கப்பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.
நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோயிலிற்கு செல்லலாம். அங்கு தீபமேற்றி முருகனை நினைத்து வழிபட வேண்டும்.
மேலும் வீட்டில் இருந்து கூட பூஜை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து சிறிய அளவில் முடிக்கலாம்.
இந்த விரதத்தால், விரைவில் திருமண யோகமும், செல்வச் செழிப்பும் உண்டாகும். பிறகு அருகில் உள்ளவர்களை வீட்டிற்கு அழைத்து உணவு அளிக்க வேண்டும்.
மேலும் 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்புப் பெற்ற நன்னாளான பங்குனி உத்திரம் இந்த 2024 - ம் ஆண்டு மார்ச் 25 அன்று வருகிறது. எனவே அந்நாளில் சிவாலயம் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.