சித்ரா பௌர்ணமி பூஜையால் கிடைக்கும் நன்மைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்ரா பௌர்ணமி பூஜையால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய பதிவுகள் :

சித்ரா பௌர்ணமி நாளில் குல தெய்வம், இஷ்ட தெய்வம், இறைவனடி சேர்ந்த மூதாதையர்கள் ஆகியோரை மனமுருகி வேண்டினால் நம் கர்ம வினைகள் அனைத்தும் குறைக்கப்பட்டு புண்ணிய கணக்கு அதிகமாகும். 

வசந்த காலத்தின் துவக்கத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மனித வாழ்வின் வசந்த காலத்தின் துவக்கமாக கருதப்படுகின்றது. 

இந்த நாளில் செய்யப்படும் தான தர்மம் நம் குழந்தைகளையும் அடுத்து வரும் ஏழு தலைமுறையையும் காக்கும் என நம்பப்படுகின்றது. 

மாலை வேளையில் பூஜை அறையில் விளக்கேற்றி, வீட்டு வாசலில் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து மீண்டும் குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்க வேண்டும். 

மாலையில் கூட்டுப்பிரார்த்தனை செய்வது மிக நல்லது. இதன் மூலம் வீட்டில் சுபிட்சம் அதிகரிக்கும். 

மலையில், சுண்டல், பயறு வகைகள், கேசரி, சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம் போன்றவற்றை நெய்வேத்தியம் செய்யலலாம். 

சித்ரா பௌர்ணமியன்று ஊனமுற்றோர், ஏழைகள் ஆகியோருக்கு உணவு, ஆடைகள் போன்றவற்றை தானம் செய்தால், குடும்பத்தில் எப்போதும் உணவு மற்றும் பிற வசதிகளுக்கான குறைகள் இருக்காது என ஐதீகம். 

சித்ரா பௌர்ணமி நாளில், ஆறு, நதி, கடல் போன்றவற்றுக்கு பூஜைகள் செய்வதும் வழக்கம். இதன் மூலம் வாழ்வில் தண்ணீரால் ஏற்படும் கண்டம் குறைந்து தண்ணீர் கஷ்டமும் தீரும் என நம்பப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top