காளி வழிபாட்டின் பலன்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காளி வழிபாட்டின் பலன்கள் பற்றிய பதிவுகள் :

எங்கெல்லாம் துஷ்டங்கள் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அதை காலி செய்வதனால் அன்னை காலீயானாள்.

காலத்தின் தலைவி என்பதால்
ஆதியில் காலீ என்றே குறிப்பிடபட்டுருந்தது.
காலத்தில் மருகி காளீ என்று குறிப்பிடபடுகிறது.

காளியின் திருவடிகளைத் தொழுபவர்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்யம் சேரும்.

பலம், நலம், பெரும் கீர்த்தி, கவி புணையும், ஆற்றல், முக்தி முதலிய அனைத்தும் கிடைக்கும்.

காளியின் அருளால் பிரம்ம ஞானம் ஏற்படுவது உறுதி அதனால் ஜீவன் முக்தியாவதும் உறுதி.

காளியின் பக்தன் என்றுமே பாக்கியசாலி .
அவன் விசேஷ ஞானத்தை உடையவனாக இருப்பான்.

காளியின் பக்தர்களை தேவர்களும் வழிபடுவார்கள். காளீ வழிபாடு செய்பவன் பூர்ண தீட்சை பெற்றவன் ஆகிறான்.

காளியின் பக்தன் நல்லவனாகவும், தைரியசாலியாகவும், உண்மையே பேசுபவனாகவும், சுறு சுறுப்பானவனாகவும் இருப்பான்

காளியின் பக்தனே வேதத்தின் உண்மைப் பொருளை உணர முடியும். வேதத்தைப் பற்றிக் கூறும் வல்லமை உடையவனாகவும் அவன் மட்டுமே ஆக முடியும்.

காளியின் பக்தனாக இருப்பவன் அசுவமேதம் முதலிய யாகங்களைச் செய்த பலனை அடைகிறான். தானம் செய்ததின் பலன்களையும் இவனே அடைகிறான் .மகா தவம் செய்தவனாகவும் ஆகிறான்.

காளீ வழிபாடு செய்பவன் அம்மையையும் அப்பனையும் பிரித்துணர மாட்டான்.

காளியை வழிபடுவதால் பிரம்மா, விஷ்ணு, சிவன், கெளரீ, லக்ஷ்மி, கணபதி, ஸூர்யன் ஆகிய அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

போர், கிளர்ச்சி, பூகம்பம், எரிமலை வெடித்தல், சூறாவளி, வெள்ளம், தொற்று நோய் முதலியவற்றில் இருந்து அவளது அருளால் மட்டுமே தப்பிக்க இயலும்.

காளிதேவியே கால தத்துவமாகவும் பிராண சக்தியாகவும் குண்டலினியாகவும் விளங்குகின்றாள் எனவே காளியை வழிபடும் சாதகனுக்கு குண்டலினி சக்தி தானாகவே செயல்படத் தொடங்கிவிடும்.

காலத்தை அழிப்பவளும்,உருவாக்குபவளும் அவளே. தீயவர்களின் நட்பில் இருந்து விடுபட வைப்பாள். தீமையை செய்பவன் காளீ பக்தனாலேயே அழிக்கபடுவான்.

காளீ பக்தன் சாதகர்கள் சிறந்த அறிஞராகவும் சொற்பொழிவாளராகவும் கவிஞராகவும் ஆவார்கள்.

பெருஞ்செல்வம் தானாகவே வந்து சேரும் 
தானம் செய்வதில் விருப்பம் உண்டாகும் அதனால் பாவம் அழிந்து தர்மவான்களாவார்கள்

எப்பொழதும் ஆனந்தத்துடன் இருப்பர்
தயை நிறைந்தவர்களாக மாறுவர்
பிறவிக்கடலைக் கடந்து மோட்ச சாம்ராஜ்யத்தை அடைவர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top