ஹயக்ரீவ ஜெயந்தி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஹயக்ரீவ ஜெயந்தி பற்றிய பதிவுகள் :

இந்த ஆண்டு ஹயக்ரீவ ஜெயந்தி ஆகஸ்ட் 19 ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று வேதங்களையும் வழிபட வேண்டும். 

பிரம்ம தேவர் இந்த நாளில் தான் வேதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதாக ஐதீகம். இதனால் ஆவணி மாத பெளர்ணமி நாளில் பிரமாணர்கள் வேதங்களை படிக்க துவங்குவதற்கான நாளாக வைத்துள்ளனர்.

பெரும்பாலும் பெருமாள் கோவில்களில் லட்சுமி தேவி தனி சன்னதியிலேயே காட்சி தருவார். ஆனால் ஹயக்ரீவர் ரூபத்தை தரிசிக்கும் போது லட்சுமி தேவி எப்போதும் அவரது மடியில் அமர்ந்த நிலையிலேயே காட்சி தருவார்.

ஹயக்ரீவர் ஞானத்தின் கடவுளாக போற்றப்படுகிறார். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு குரு ஹயக்ரீவர் தான் என புராணங்கள் சொல்கின்றன.

கல்வியில், வேலையில் வெற்றி பெற வேண்டும், உயர்வான நிலையை அடைய வேண்டும் என்பவர்கள் ஹயக்ரீவரை வழிபடுவது சிறப்பானதாகும்.

அம்பிகையின் நாமங்களை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக அகத்திய முனிவர் மூலம் லலிதா சகஸ்ரநாமத்தை அருளியவரும் ஹயக்ரீவரே.

ஹயர்க்ரீவர் கல்வி கடவுளாக மட்டுமின்றி, லட்சுமி தேவி உடன் இருப்பதால் இவர் செல்வத்திற்குரிய தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறார்.

ஹயக்ரீவ மந்திரம் :

"ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே"

புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து, ஏலக்காய், கற்கண்டு கலந்த பால் நைவேத்தியமாக படைத்து இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்லி வந்தால் தடைகள் விலகும், நோய்கள் நீங்கும்.

ஸ்ரீஹயக்ரீவர் காயத்ரி மந்திரம் :

ஓம் வாகீஸ்வராய வித்ம
ஹேஹயக்ரீவாய திமஹி
தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்

என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால், கல்வியில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top