மஹா சங்கடஹர சதுர்த்தி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா சங்கடஹர சதுர்த்தி பற்றிய பதிவுகள் :

விநாயகரை வணங்கினால் வினைகள் தீரும். கணங்களின் அதிபதி ஆதலால் இவர் கணபதியாவார். விக்னங்களை போக்குபவர் விநாயகர்.

விநாயகருக்கு உகந்த விரதம் சதுர்த்தி விரதம். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் துன்பங்கள், துயரங்கள், சங்கடங்களை நீக்கி சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். 

திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இதில் தேய்பிறையில் வரும் 4 வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். 

இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம். 

சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். 

இரவு சந்திரனுக்கு பூஜை முடிந்தபின் அந்த பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு தனிமையில் படுத்து உறங்க வேண்டும். 

செல்வ வளம் தரும் செவ்வாய் சதுர்த்தி
ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை சதுர்த்தியில் விரதத்தை தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் புராணம் சொல்கின்றன. 

புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். 

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

சனிக்கிழமை வரும் சதுர்த்தி நாளில் குழந்தைகள் பெயரில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள், உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்தால் வீட்டு குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் தேடி வரும். 

குழந்தை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் சங்கட சதுர்த்தியன்று அரிசி சாதத்தை சமைத்து பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருளால் பிள்ளை வரம் கிடைக்கும்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு துன்பங்கள் நீங்கி நிலையான சந்தோஷம் கிடைக்கும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகள் கிடைக்கும். கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும்.

வேலையில்லாமல் சிரமப்படுபவர்களும், நீண்ட நாட்கள் நோயினால் அவதிப்படுபவர்களும், சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை நினைத்து விரதம் இருக்கலாம். இதனால் தீராத நோய்களும் தீரும், திருமண தடை அகலும். 

தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் 11 செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை அணிவித்து அங்காரக சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் கடன் பிரச்சினை தீரும்.

திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதம் இருந்தால் நல்ல மண வாழ்க்கை அமையும்.

ஓவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடைக்கும். 

தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

வியாழக் கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நல்ல புத்திசாலி ஆக மாற்றி விடும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் அதி விசேஷம்.

அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

• இளநீர் அபிஷேகம் நம் மனதை அமைதிப்படுத்தும்.

• பால் அபிஷேகம் தூய்மையையும் தயிர்
அபிஷேகம் சாந்தத்தையும் தரும்.

• கரும்புப்பால் இழந்த செல்வத்தையும்

• பழச்சாறு அபிஷேகம் 16 வகை ஐஸ்வர்யங்களையும் தரும்.

பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருமஞ்சனம், மஞ்சள், பன்னீர், விபூதி, பச்சை கற்பூரம் முதலியன அபிஷேகம் செய்து பூர்ண அலங்காரம் செய்து அருகம்புல் மாலை வெள்ளெருக்கு மாலை அணிவித்து ஆராதனை செய்ய பலன் இரட்டிப்பாகும்.

கணபதி காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top