சனி மஹா பிரதோஷம், நந்தி பாடல்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சனி மஹா பிரதோஷம் பற்றிய பதிவுகள் :

சனி கிழமை வருகின்ற பிரதோஷம் பிரதோஷத்தை சனி மஹா பிரதோஷம் என்றே அழைப்பது வழக்கம். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.

நந்தி பாடல் :

வழிவிடு நந்தி வழிவிடுவே
வாழ்வில் நாங்கள் வளர்ந்துயர
வழிவிடு நந்தி! வழிவிடுவே
வையகம் வளர வழிவிடுவே!

எம்பிரான் சிவனைச் சுமப்பவனே
எல்லா நலனும் தருபவனே
ஏழைகள் வாழ்வில் இருளகல
என்றும் அருளைச் சுரப்பவனே!

நீரில் என்றும் குளிப்பவனே
நெய்யில் என்றும் மகிழ்பவனே
பொய்யில்லாத வாழ்வு தர
பொங்கும் கருணை வாரிதியே!

உந்தன் கொம்பு இரண்டிடையே
உமையாள் பாகன் காட்சிதர
தேவர் எல்லாம் அருள் பெற்றார்
தேனாய் இனிக்கும் செய்தி அப்பா!

தேடிய பலனைத் தந்திடுவாய்
தேவர் போற்றும் நந்திதேவா!
வாழ்வில் வளமே வந்துயர
வழியே காட்டி அமைந் திடுவாய்!

நந்தனார் போற்றும் நந்தி தேவா!
நாலுந் தெரிந்த வல்லவனே
எம்பிரான் அருளை எமக்கருள
என்றுந் துணையாய் நிற்பவனே!

பிரதோஷம் என்றால் உன் மகிமை
பெரிதும் வெளியில் தெரிந்திடுமே
தேவர்க்குக் காட்சி உன்மூலம்
தெரியச் செய்த பெரியவனே!

நலம்தரும் நந்தி :

பிரதோஷ காலத்தில்
பேசும் நந்தி!
பேரருளை மாந்தர்க்கு
வழங்கும் நந்தி வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி!
வறுமையினை எந்நாளும்
அகற்றும் நந்தி!

கும்பிட்ட பக்தர்துயர்
நீக்கும் நந்தி!
குடங்குடமாய் அபிஷேகம்
பார்த்த நந்தி!
பொன்பொருளை வழங்கிடவே
வந்த நந்தி!
புகழ்குவிக்க எம் இல்லம்
வருக நந்தி!

ஈஸ்வர தியானம் :

நமசிவாய பரமேஸ்வராய
சசிசேகராய நம ஓம்!
பவாய குண சம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top