திருவோண விரதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவோண விரதம் பற்றிய பதிவுகள் :

திருமாலின் அவதாரங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அவதாரம் பிடிப்பதை போல் வாமன அவதாரத்தை பலருக்கும் பிடிக்கும். குள்ளமான உருவமாக சாதாரண சிறுவனின் ரூபத்தில் வந்து, மிகப் பெரிய உருவமாக வளர்ந்து, தேவர்களை காத்த பெருமாள் என்பதால் அவரை வழிபட்டால் சாதாரண நிலையில் இருக்கும் நமக்கும் வளர்ச்சி தருவார் என்பது நம்பிக்கை.

திருவோண விரத வரலாறு :

வாமனராக அந்தண சிறுவனின் உருவத்தில் வந்து, இந்திர பதவியை அடைவதற்காக யாகம் நடத்திய மாபலிசக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டார், திருமால். தானம் தருவதாக மாபலி வாக்களித்து, கமண்டலத்தில் இருந்த நீரை ஊற்ற, அந்த நீர் கையில் பட்ட உடனேயே மிகப் பெரிய திருவிக்ரம ரூபமாக வளர்ந்து காட்சி அளித்தார் பெருமாள். 

தன்னுடைய முதல் அடியால் விண்ணுலகத்தையும், இரண்டாம் அடியில் பூலோகத்தையும் அளந்தவர், மூன்றாவது அடியை எங்கு வைப்பது என மாபலியிடம் கேட்டார். அவர் தன்னுடைய தலை மீது வைக்கும் படி சொன்னதும் அவரை, தன்னுடைய திருவடிகளால் அழுத்தி, பாதாளலோகத்தில் அனுப்பி வைத்து, அங்கு தவம் செய்து, அடுத்த இந்திரனாகும் பேற்றை பெறுவாய் என அருளினார், திருமால். 

இருந்தாலும் தான் ஆண்ட மலையாள தேச மக்களை காண வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் மகாபலி மன்னன் பூலோகத்திற்கு வருவதால் ஐதீகம். இந்த நாளே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

திருவோண விரதம் இருக்கும் முறை :

• திருவோணம் விரதம் இருக்க நினைப்பவர்கள் முதல் நாள் இரவே சைவமாக சாப்பிட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும்.

• திருவோண நட்சத்திரம் வரும் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, நாராயண மந்திரத்தையோ அல்லது வாமன மூர்த்திக்கு உரிய மந்திரத்தையோ சொல்லி வழிபட வேண்டும்.

• காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் உபவாசமாக இருக்க வேண்டும். பகலில் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடரலாம். அல்லது உப்பி இல்லாமல் உணவு சாப்பிடலாம். அல்லது முடியும் என்கிறவர்கள் முழு நேரமும் உபவாசமாக இருக்கலாம்.

• மாலையில் வீட்டில் விளக்கேற்றி, வாமனர் அல்லது உலகளந்த பெருமாள் அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பெருமாளின் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.

• பால், பழம், கற்கண்டு, சுண்டல், புளியோதரை எவ எது முடியுமோ அதை படைத்து வழிபடலாம். துளசி தீர்த்தம் கண்டிபாக வைக்க வேண்டும்.

• பூஜை அறையில் வழிபட்ட பிறகு வெளியே வந்து சந்திரனை பார்த்து வழிபட வேண்டும். இந்த நாளில் சந்திரனை வழிபட்டால் மனக்குழப்பங்கள், சந்திர தோஷம் ஆகியன நீங்கும்.

திருவோண விரத பலன்கள் :

திருவோண விரதம் இருப்பவர்களுக்கு நாராயணரின் அருள் முழுவதுமாக கிடைக்கும். 

வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். 

தொழில், வாழ்க்கை என அனைத்தும் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும். 

வாழ்வில் துன்பம், கஷ்டம் என்ற நிலை மாறி, திருப்பம் ஏற்படும். 

திருமண வரம், குழந்தை வரம் என என்ன வரம் வேண்டினாலும் கிடைக்கும். 

மனக்குறை என்பது இல்லாத வாழ்க்கை ஏற்படும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top