பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் பற்றிய பதிவுகள் :

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் ஆகும்.. அன்றைய மாதத்தில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேங்கள் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் நம்முடைய முன்னோர்களுக்கும் சிறப்பான மாதமாக கருதப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில், சூரியன் 'கன்னி' ராசியில் பெயர்ச்சியாகி தென்திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பது பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

மார்கழியை விட புரட்டாசியையே பெருமாளுக்குரிய மாதமாக பக்தர்கள் வணங்குகிரார்கள். அதோடு இது முன்னோர்களை வழிபடுவதற்கான மகாளய அமாவாசை, அம்பிகை வழிபாட்டிற்குரிய நவராத்திரி ஆகியவற்றை கொண்ட மாதமாகும். இதனால் இது வழிபாட்டிற்குரிய மாதமாகவும், உயர்வான புண்ணிய பலன்களை தரக் கூடிய மாதமாகவும் கருதப்படுகிறது.

புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு உரியது. இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை. 

புரட்டாசி சனிக்கிழமை அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து நீராடி, நெற்றியில் பெருமாளுக்குரிய திருநாமம் ஈட்டுக்கொள்ள வேண்டும். வீட்டில் சிறு உயிர்களும் உண்டு மகிழ மாக்கோலம் ஈட வேண்டும். பின்னர் வீட்டில் விளக்கேற்றி பெருமாள் வழிபாடு செய்யலாம். பல நாமாவளிகள் சொல்ல முடியாவிட்டாலும் "கோவிந்தா கோவிந்தா" என்று ஒரே ஒரு மந்திர செல்லை சொல்லி வணங்கலாம்.

பெருமாள் வழிபாடு, நவராத்திரி பூஜை, நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில் குழந்தைகளுக்கு புதிதாக கல்வி கற்றுக்கொள்ள தொடங்குவது சிறந்தது. பெருமாள் வழிபாடு, நவராத்திரி பூஜை, நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில் குழந்தைகளுக்கு புதிதாக கல்வி கற்றுக்கொள்ள தொடங்குவது சிறந்தது. 

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசை என்று பெயர். இந்த மாததில் வரக்கூடிய பெளர்ணமிக்கு பின் அமாவாசை வரை வரக்கூடிய 15 நாட்கள் மகாளயபட்சம் என்று பெயர். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட உகந்த நாட்களாகும்.

புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடாதவை

புதிய வீடு வாங்குதல், புதிதாக தொழில் வியாபாரம் தொடங்குதல், கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல் வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்யப்படுவதில்லை.

இருப்பினும், ஒரு நிலம், மனை வாங்கி பத்திரப் பதிவு செய்ய ஏற்ற மாதமாகும். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வந்தால் தோஷங்கள் அனைத்து நீங்கி நன்மை நடக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top