வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் விநாயகரை எந்த இடத்தில் வைக்கப் போகிறீர்களோ, அந்த இடத்தை சுத்தம் செய்து அலங்கரித்து வைக்க வேண்டும்.
விநாயகரை மனையில் வைத்து பூஜை செய்வதற்கு முன் அதில் கோலம் போட வேண்டும்.
இரண்டு நபராக விநாயகர் சிலையைக் கொண்டு வர வேண்டும்.
வீட்டுக்குள் கொண்டு வரும் முன்பு ஆரத்தி எடுக்க வேண்டும்.
விநாயகர் சிலை மீது நீர் தெளித்து, பூஜை செய்து மனையில் வைக்க வேண்டும்.
பின்னர், மாலை, வஸ்திரம், பூக்கள், மஞ்சள், குங்குமம் என்று அலங்கரிக்கலாம்.
விளக்கு மற்றும் ஊதுபத்தி ஏற்றி பூஜையைத் தொடங்கலாம்.
விநாயகர் சிலையை பூக்கள், விளக்குகள் உள்ளிட்டவை கொண்டு அலங்கரிக்கலாம்.
பூஜைக்கு பழங்கள், இனிப்புகள், வழக்கமான பூஜை செய்ய நீங்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், ஊதுபத்தி, கற்பூரம், வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் உள்ளிட்டவற்றை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிரசாதமாக, தயிர், பால், வெண்ணெய், சோளம், கம்பு, தேன், நெய் போன்ற உணவுகளை வைக்கலாம்.
பழங்களில் வாழை, ஆப்பிள், மாதுளை, ஆகியவற்றை வைக்கலாம்.
இதைத் தவிர, முக்குக்கடலை, சுண்டல், கொழுக்கட்டை, பாயசம், போளி, லட்டு, புளி சாதம், எலுமிச்சை சாதம், உள்ளிட்டவற்றை சமைத்து நைவேத்தியம் தயார் செய்யலாம்.
பின் பூஜைகள் முடித்து பஜனைகள் பாட வேண்டும்.
தினமும் ஏழைகளுக்கு உணவளித்து தினசரி பூஜையை முடிக்க வேண்டும்.