மாத சிவராத்திரி விரதங்களின் மகிமைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாத சிவராத்திரி விரதங்களின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :

சிவபெருமானுக்கு தீர்த்தவாரி செய்ய வேண்டும். மணம் மிகுந்த மலரை சிவபெருமானின் உச்சி முதல் திருத்தாள் வரை தூவ வேண்டும். தூவும் பொழுது நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு நல்ல தூய்மையான ஆடையை அணிவிக்க வேண்டும். எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிவிக்க வேண்டும்.

ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரத்தை செய்ய வேண்டும், பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும் என்று லிங்க புராணம் கூறுகிறது.

ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்கிறது.

1. சித்திரை மாதம்: இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.

2. வைகாசி மாதம்: வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.

3. ஆனி மாதம்: வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.

4. ஆடி மாதம்: தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

5. ஆவணி மாதம்: வளர்பிறை - அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.

6. புரட்டாசி மாதம்: வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

7. ஐப்பசி மாதம்: வளர்பிறை - துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.

8. கார்த்திகை மாதம்: 2 சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

9. மார்கழி மாதம்: வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.

10. தை மாதம்: வளர்பிறை - நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

11. மாசி மாதம்: தேய்பிறை - தேவர்களால் வழிபடப்பட்டது.

12. பங்குனி மாதம்: வளர்பிறை - குபேரனால் வழிபடப்பட்டது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top