மஹாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய பதிவுகள் :

அஷ்டலட்சுமியாக அருள்பாலிக்கும் மஹாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்களையும், அவள் வழங்கும் செல்வங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

1. ஆதி லட்சுமி
2. தனலட்சுமி
3. சந்தான லட்சுமி
4. கஜ லட்சுமி
5. வித்யாலட்சுமி
6. விஜய லட்சுமி
7. தைரிய லட்சுமி

ஆதி லட்சுமி: 

இவளுக்கு ‘ரமணா’ என்ற பெயரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவள் இவள். தான்ய லட்சுமி: உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்கும் பூமித்தாய்தான் இவள். 

விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள்.

தனலட்சுமி

உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது ‘தனம்‘ எனப்படுகிறது. அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள்.

சந்தான லட்சுமி: 

நல்ல குடும்பமும் நல்ல குழந்தைகளும் ஒருவனது வாழ்க்கையை வளமாக்கும் செல்வங்கள். எத்தனை பொருட்செல்வம் இருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையே என்று ஏங்கித் தவிப்பவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்த்து, குழந்தைச் செல்வத்தை அருளுபவள் இவள்.

கஜ லட்சுமி: 

லட்சுமிக்கு ‘க்ஷீராப்தி தனயை’ என்ற பெயருண்டு. பாற்கடலில் தோன்றியவள் என்பது இதன் பொருள். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது இரண்டு யானைகள் தோன்றி, தங்கள் தும்பிக்கையில் தாங்கிய பொற்குடத்தால் தேவிக்குப் பாலாபிஷேகம் செய்தன. 

இருபுறங்களிலும் யானைகள் நின்றதால், அவள் கஜலட்சுமி எனப்பட்டாள். இன்றும் ஆலயங்களில் கர்ப்பக்கிரஹ வாயிலிலும், வீடுகளின் வாசற்படி நிலையிலும் கஜலட்சுமி சிற்பம் வைக்கப்படுவதைக் காணலாம். மனத் தூய்மையையும், மனஅமைதியையும் தருபவள் இவள்.

வித்யாலட்சுமி

அறிவாற்றல் இல்லையென்றால், எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனிருக்காது. அறிவாற்றல் வளர ஆதாரமாக விளங்குபவள் வித்யாலட்சுமி. உயரிய ஞானத்தை அடைய வழி செய்பவளும் இவளே! இவள் சரஸ்வதியின் அம்சம்.

விஜய லட்சுமி: 

கடுமையான முயற்சியும் உழைப்பும் நிச்சயமாக வெற்றி தரும். அந்த உழைப்புக்குரிய சக்தியைத் தந்து வெற்றியோடு வாழ அருள்புரிபவள் விஜயலட்சுமி.

தைரிய லட்சுமி: 

கல்வியும் செல்வமும் இருந்துவிட்டால் போதுமா? தர்மநெறியில் நினைத்ததைச் செய்து முடிக்க மனோபலமும், உடல் பலமும், வைராக்யமும், தைரியமும் அவசியம் அல்லவா? அதைத் தருள்கின்றவள் தைரியலட்சுமி.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top