நவராத்திரியின் மூன்றாம் நாள் அம்பிகை, அசுரர்களுக்கு எதிரான போரில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்த நாளாக கருதப்படுகிறது.
ஏராளமான அசுரர்களை வெற்றி கொண்ட வெற்றி திருக்கோலத்துடன் காட்சி தருவதால் இந்த நாளில் அம்பிகையை வழிபட்டால் வாழ்வில் நாம் எடுக்கும் முயற்சிகளில் நமக்கும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நவராத்திரியின் மூன்றாம் நாளில் அம்பிகையை ஞானத்தின் வடிவமாக வழிபட வேண்டும். மூன்றாம் நாளுக்குரிய தேவியே நமக்கு தைரியம், பலம், வெற்றியை தரக் கூடியவள் ஆவாள்.
இவளை குங்குமத்தாலும், செண்பக பூக்களாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் தன, தானியம் பெருகும். சிறப்பான வாழ்வு அமையும். இது செல்வத்தை அருளும் மகாலட்சுமியின் வழிபாட்டிற்குரிய துவக்க நாளாகவும் கருதுகிறோம். இச்சை, கிரியை, ஞானம் எங்கு ஒன்று சேருகின்றதோ அங்கு வெற்றி நிச்சயமாக இருக்கும்.
அதனால் காரியங்களில் வெற்றியை வேண்டுபவர்கள் நவராத்திரியின் மூன்றாம் நாளில் வழிபடுவது சிறப்பானதாக இருக்கும்.
அம்மனின் வடிவம் - வாராஹி
கோலம் - மலர் வகை கோலம்
மலர் - சம்பங்கி
இலை - துளசி
நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்
சுண்டல் - காராமணி சுண்டல்
பழம் - பலாப்பழம்
நிறம் - நீல நிறம்
ராகம் - காம்போதி