மார்கழி மாத சனி மஹா பிரதோஷம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி மாத சனி மஹா பிரதோஷம் பற்றிய பதிவுகள்:

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று, சனியின் குருவான சிவ பெருமானை வழிபட்டால் சிவனின் அருளுடன், சனியால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு அவரது அருளையும் பெற முடியும் என்பது நம்பிக்கை. 

டிசம்பர் 28ம் தேதியான இன்று மார்கழி மாதத்தின் பிரதோஷம் வருகிறது. 2024ம் ஆண்டின் கடைசி பிரதோஷமாக இந்த சனிப் பிரதோஷம் அமைந்துள்ளது.

இந்த நாளுக்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால் சனிக்குரிய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது தான். 

சனிக்கு விருப்பமான இரண்டாவது நட்சத்திரமாக வரும் அனுஷம் நட்சத்திரத்தில் வரும் சனி மஹா பிரதோஷத்தில் குறிப்பிட்ட சில வழிபாடுகளை செய்வதால் நோய், கடன் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கும். 

அதோடு நமக்கு செல்வ செழிப்பும் ஏற்படச் செய்யும்.

நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், எவ்வளவு மருத்துவம் செய்தும் பலன் தரவில்லை என்கிறவர்கள், கடனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், சனியின் பிடியில் சிக்கி பலவிதமான துன்பங்களை அனுபவிப்பவர்கள் போன்றவர்கள் இன்று வரும் மார்கழி சனிப்பிரதோஷம் அன்று தாங்கள் பிறந்த ஊர்களில் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது நல்லது. 

அப்படி செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சனி பரிகார தலங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வது நல்லது. 

சனி பிரதோஷத்தன்று பகல் வேளையில் மற்றவர்களுக்கு மோர், நீர், பானகம், இளநீர், நுங்கு ஆகியவற்றை கொடுத்து, அவர்களின் வயிறை குளிர வைப்பதால் சனியின் மனம் குளிரும். 

அதே போல் மெதுவாக இயங்கக் கூடிய மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோருக்கு தேவையான விஷயங்களை செய்து தருவது, உதவுவது ஆகியவை சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை பெற முடியும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top