நாம் இல்லாதவருக்கு செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும். எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்.
2. பூமி தானம் - இகபரசுகங்கள்.
3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி.
4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி.
5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்.
6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி.
7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்.
8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்.
9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்.
10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்.
11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்.
12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி.
13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி.
14. பால் தானம் - சவுபாக்கியம்.
15. சந்தனக்கட்டை தானம் - புகழ்.
16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.