தை மாத முக்கிய விரத மற்றும் சுப முகூர்த்த தினங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தை மாத முக்கிய விரத மற்றும் சுப முகூர்த்த தினங்கள் பற்றிய பதிவுகள் :

தை மாதம் என்பது மங்களங்கள், மகிழ்ச்சி ஆகியவை நிறையும் மாதமாகவும், புதியவற்றின் துவக்க மாதமாகவும் கருதப்படுகிறது. மார்கழி மாதம் என்பது ஆன்மிக மாதம் என்பதால் அதில் விசேஷங்கள் எதுவும் நடத்த மாட்டார்கள். 

மாறாக தை மாதம் பெருக்கத்திற்கான மாதம் என்பதால் அதில் திருமணம் போன்ற விசேஷங்கள், புதிய தொழில் துவங்குவது, புது வீடு குடி புகுவது போன்ற சுப நிகழ்ச்சிகள் அணிவகுக்க துவங்கும்.

தை மாதத்தின் மிக முக்கிய நாட்களாக பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, தைப்பூசம் ஆகியவை சொல்லப்படுகிறது. தை மாதத்தில் எந்ததெந்த சுப தினங்கள், விரத நாட்கள் எப்போது வருகிறது என்பதை பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தை மாத விசேஷ நாட்கள் :

• ஜன 14 - தை 01 - செவ் - தைப்பொங்கல்

• ஜன 15 - தை 02 - புத - மாட்டுப் பொங்கல்

• ஜன 16 - தை 03 - வியா - உழவர் திருநாள்

• ஜன 29 - தை 16 - புத - தை அமாவாசை

• பிப் 04 - தை 22 - செவ் - ரத சப்தமி

• பிப் 11 - தை 29 - செவ் - தைப்பூசம்


தை மாத விரத நாட்கள் :

• அமாவாசை - ஜன 29 - தை 16 - புத

• பெளர்ணமி - பிப் 12 - தை 30 - புத

• கிருத்திகை - பிப் 06 - தை 24 - வியா

• திருவோணம் - ஜன 29 - தை 16 - புத

• ஏகாதசி - ஜன 25 - தை 12 - சனி

• சஷ்டி - ஜன 19 - தை 06 - ஞாயி

• சங்கடஹர சதுர்த்தி - ஜன 17 - தை 04 - வெள்

• சிவராத்திரி - ஜன 27 - தை 14 திங்

• பிரதோஷம் - ஜன 27 - தை 14 - திங்

• சதுர்த்தி - பிப் 02 - தை 20 - ஞாயி

• ஏகாதசி - பிப் 08 - தை 26 - சனி

• சஷ்டி - பிப் 03 - தை 21 - திங்

• பிரதோஷம் - பிப் 10 - தை 28 - திங்


தை மாத சுப முகூர்த்த நாட்கள் :

• ஜன 19 - தை 06 - ஞாயி - தேய்பிறை முகூர்த்தம்

• ஜன 20 - தை 07 - திங் - தேய்பிறை முகூர்த்தம்

• ஜன 31 - தை 18 - வெள் - வளர்பிறை முகூர்த்தம்

• பிப் 02 - தை 20 - ஞாயி - வளர்பிறை முகூர்த்தம்

• பிப் 03 - தை 21 - திங் - வளர்பிறை முகூர்த்தம்

• பிப் 10‌ - தை 28 - திங் - வளர்பிறை முகூர்த்தம்


தை மாத வாஸ்து நாட்கள் :


• ஜன 25 - தை 12 - சனி

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top