தமிழ் கடவுளான முருகனை மனம் உருகி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் அதிகளவில் உள்ளது.
காரத்திகை மற்றும் மார்கழி மாதங்களில் முருகனுக்கு மாலை அணிந்து, நடைப்பயணமும் மேற்கொள்கின்றனர். அறுபடை வீடுகளில் மட்டுமல்ல சின்ன சின்ன முருகன் கோவில்களும் பக்தர்களிடம் கூட்டம் அலைமோதுகிறது.
முருகன் நினைத்த காரியங்களை நிறைவற்றுவார் என்பதற்காக சஷ்டி விரதம், கார்த்திகை போன்ற பல வழிபாட்டு முறைகளை மேற்கொள்வார்கள். இந்த வரிசையில் முருகனுக்கு உகந்த வெற்றிலை தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
வெற்றிலை தீபத்தின் நன்மைகள்:
நெய் தீபம், எலுமிச்சை தீபம், போன்ற தீபங்களை ஏற்றுவதோடு முருகனுக்கு மிகவும் பிடித்த வெற்றிலை தீபத்தை தொடர்ச்சியாக 9 வாரங்கள் ஏற்ற வேண்டும்.
மனம் உருகி வெற்றிலை தீபம் ஏற்றி முருகனை வழிபடும் போது நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம். குறிப்பாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முதல் திருமணம் விரைவில் கைக்கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் வெற்றிலை தீபம் ஏற்றுவதால் விரைவாக அனைத்தும் கைக்கூடும்.
வெற்றிலை தீபம் எப்போது ஏற்ற வேண்டும்?
வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் முருகனுக்கு மிகவும் பிடித்த நாளாக உள்ளது செவ்வாய் கிழமை. இந்த நாளில் வெற்றிலை தீபம் ஏற்றுவது நல்லது.
செவ்வாய் ஹேரையில் விளக்ககேற்ற வேண்டும். அதாவது காலை 6 மணியிலிருந்து 7 மணி வரையும், மதியம் 1 மணியிருந்து 2 மணி வரையும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை விளக்கேற்றுவது நல்லது.
விளக்கேற்றும் வழிமுறைகள்:
வெற்றிலை தீபம் ஏற்றுவதற்கு முன்னதாக பூஜை அறையை நன்கு சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பன்னீர் தெளித்து சுத்தம் செய்யும் போது வாசனை நமது மனதை அமைதியாக்கும்.
வெற்றிலை தீபத்தை எப்போது ஏற்றினாலும் நுனி இல்லாத வெற்றிலையைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் வெற்றிலையில் காம்போடு விளக்கேற்றக்கூடாது.
பின்னர் 6 வெற்றிலையை நன்கு சுத்தம் செய்து மஞ்சள், குங்கும் இட வேண்டும். இதையடுத்து ஒரு தட்டில் வெற்றிலைகள் அனைத்தையும் மயில் தோகை போல் விரித்து வைக்கவும்.
பின்னர் அடுக்கி வைத்துள்ள வெற்றிலையில் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற வேண்டும்.