மஹா சிவராத்திரி அன்று சொல்லி வழிபட வேண்டிய சக்திவாய்ந்த 7 சிவ மந்திரங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா சிவராத்திரி அன்று சொல்லி வழிபட வேண்டிய சக்திவாய்ந்த 7 சிவ மந்திரங்கள் பற்றிய பதிவுகள் :

மஹா சிவராத்திரியன்று சக்திவாய்ந்த சிவ மந்திரங்களை உச்சரிப்பதால் சிவ பெருமானுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதோடு மன அமைதி, வெற்றி, செல்வ வளம் ஆகியனை வாழ்க்கை முழுவதும் குறைவில்லாமல் கிடைக்கும். 

மஹாசிவராத்திரி அன்று பூஜை விதிகளின் படி சிவ பூஜை செய்வது, தியானம் செய்வது ஆகியன சிவனின் நிறைவான அருளை தரும். சிவ பெருமான் தீமைகளை அழித்து, நன்மைகளையம், இன்பத்தையும் தரக் கூடியவர் என்பதால் அவருக்குரிய மந்திரங்களை சிவராத்திரியில் சொல்லுவது, உடலில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தும். 

சிவ பெருமானின் அருளை பெற மஹா சிவராத்திரி அன்று இரவு அர்த்த ஜாம பூஜை வேளையில் சொல்ல வேண்டிய 7 சக்தி வாய்ந்த மந்திரங்களை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

சக்திவாய்ந்த சிவ மந்திரங்கள் :


1. மஹாமிருத்யுஞ்ஜய மந்திரம் :

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே 
ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் 
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்


2. நீல கண்ட மகாதேவ மந்திரம் :

ஓம் நமோ நீலகண்டாய


3. சிவ காயத்ரி மந்திரம் :

ஓம் மகாதேவாய வித்மஹே
ருத்ரமூர்த்தய தீமஹி
தன்னோ சிவ ப்ரதோதயாத்


4. ருத்ர காயத்ரி மந்திரம் :

ஓம் தத்புருஷாய வித்மஹே
மகாதேவாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்


5. சிவ மூல மந்திரம்:

ஓம் நமசிவாய


6. தக்க்ஷிணாமூர்த்தி சிவ மந்திரம் :

ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்தயே
மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞம் ப்ரயச்ச ஸ்வாஹா


7. மிருத்யுஞ்ஜய மஹாதேவ மந்திரம் :

ஓம் மிருத்யுஞ்ஜய மகாதேவாய 
த்ரஹிமம் ஷரணாகதம்
ஜன்ம மிருத்யு ஜரா வ்யாதிபிடைடம் 
கர்மா பந்தனய

இந்த மந்திரங்களை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரிக்கலாம். ஆனால் சிவ சிந்தனையுடனும், பக்தியுடன் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. கண்களை மூடி சிவனை நினைத்தபடி, இந்த மந்திரங்களை சொல்லுவது அதீத நன்மைகளை தரும்.

மஹா சிவராத்திரி அன்று சிவ பெருமானுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரிப்பது பிரபஞ்சத்துடனான தெய்வீக ஆற்றலுடன் சக்திவாய்ந்த இணைப்பை ஏற்படுத்த உதவும். 

இந்த புனிதமான மந்திரங்களை உச்சரிப்பதால் நோய்கள் நீங்கும், மனத்தெளிவ ஏற்படும். இதன் அதிர்வுகளால் ஆத்மாவில் நேர்மறை ஆற்றல்கள் பரவும். சிவ பெருமானின் அருள் கிடைக்கும். வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். 

இது அதிர்ஷ்டம், வெற்றி, செல்வ செழிப்பு ஆகியவற்றை கொண்டு வரும். எதிர்மறை ஆற்றல்களை தடுக்கும். பாதுகாப்பு உணர்வை வழங்கும். 

சிவனின் அருள் எப்போதும் நம்முடன் இருப்பதை உணர முடியும். சிவ பெருமானுடன் நெருக்கமாக இருக்கும் உணர்வையும், ஆன்மிக ஞானத்தையும், வளர்ச்சியையும், உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறனையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top