பலரும் அறியாத சிவனின் 8 அவதாரங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பலரும் அறியாத சிவனின் 8 அவதாரங்கள் பற்றிய பதிவுகள் :

சிவ பெருமான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதே போல் பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக சிவ பெருமான் பல விதமான அவதாரங்களையும் எடுத்துள்ளார்.

பெருமாளின் அவதாரங்கள் பற்றி தெரியும் அளவிற்கு சிவ பெருமானின் அவதாரங்கள் பற்றி பலருக்கும் தெரியாது. பலரும் அறியாத சிவ பெருமானின் முக்கியமான எட்டு அவதாரங்கள் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அண்ட சராசரங்களுக்கும் தலைவனாக விளங்கும் சிவ பெருமானுக்கு எத்தனையோ திருநாமங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் சிவனின் குணம், தொழில், தன்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சொல்லப்படுபவையாகும். 

இது போல் அவதாரங்கள் பல உள்ளன. சிவ பெருமான் 64 க்கும் அதிகமான அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றில் பலரும் அறியாத எட்டு முக்கியமான அவதாரங்கள் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பலரும் அறியாத சிவனின் 8 முக்கிய அவதாரங்கள் :

1. சர்வா :

பஞ்ச பூதங்களில் இவர் நிலத்தை குறிக்கும் கடவுளாக கருதப்படுகிறார். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் ஐம்புலன்களின் வழியாக அன்பை வெளிப்படுத்தி, அன்னை வளர்க்கும் கடவுளாக விளங்குபவர் சர்வா.

2. பவா :

இவர் நீருக்குரிய தெய்வமாக கருதப்படுகிறார். இவரே மழைக்கு காரணமான கடவுளாகவும், ஏழு உலகங்களையும் காப்பவராகவும் கருதப்படுகிறார். நீர் நிலைகளை காத்து, அதுன் மூலாதாரமாக விளங்குபவராகவும் இவர் கருதப்படுகிறார்.

3. பசுபதி :

இவர் நெருப்புக்குரிய தெய்வமாக கருதப்படுகிறார். இவர் தான் வாழ்க்கையை கொடுப்பவராகவும், மத செயல்பாடுகளான யாகங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட அர்ப்பணிப்பு காயங்களை ஏற்பவர். இவரது மகன் தான் ஆறுமுகக் கடவுளான கந்தக் கடவுள் என புராணங்கள் சொல்கின்றன.

4. ஈஷானா :

இவர் காற்றின் வடிவமாக இருக்கும் கடவுள் ஆவார். அதாவது பிரபஞ்சம் முழுவதையும் தூய்மைப்படுத்தி, பிரபஞ்சத்தை உருவாக்குபவராக உள்ளார். இவர் வடகிழக்கு திசைக்கு உரியவர் என்றும் இவரது மகனே மனோஜவா. அதாவது அனுமன் அவதாரம் என சொல்லப்படுகிறது.

5. பீமா :

அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் நிறம், மணம் தன்மை இல்லாத வடிவத்தை குறிப்பதாகும். இவரது மனைவி விண்வெளியின் பத்து திசைகளாகவும், இவரது மகன் படைப்பிற்குரியவராகவும் கருதப்படுகிறார்.

6. ருத்ரா :

இது சூரியன் மற்றும் நெருப்பை குறிக்கும் அவதாரம் ஆகும். இவர் உயிர்களின் வாழ்க்கையை உயர்வடைய செய்கிறார்.

7. மகாதேவா :

உயிர்கள் மற்றும் உலகின் தொடக்கமும் - முடிவுமாக இவரே கருதப்படுகிறார். இவர் லிங்க வடிவத்தில் குறிப்பிடப்படுகிறார். அதாவது தொடக்கமும், முடிவும் இல்லாத நிலை ஆகும்.

8. உக்ரா :

இடி மற்றும் தீப்பொறியை குறிக்கும் அவதாரம் ஆகும். இவரது மனைவியே திக்ஷா.

இது போல் சிவ பெருமானுக்கு இன்னும் பல வடிவங்கள் உள்ளன. இவை அனைத்தும் உலகமும், உலக உயிர்களும் இயங்குவதற்கு ஆதாரமாக விளங்குகக் கூடியன. சிவ பெருமானின் குணங்கள், அவரது ஐந்து தொழில்களையும் அடிப்படையாகக் கொண்டே இந்த அவதாரங்கள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top