கந்தசஷ்டி கவசத்திற்கு இணையான முதல்வன் புராண முடிப்பு பாடல்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கந்தசஷ்டி கவசத்திற்கு இணையான முதல்வன் புராண முடிப்பு பாடல்கள் பற்றிய பதிவுகள் :

முருக பக்தர்கள் பலராலும் காலம் காலமாக படிக்கப்பட்டு, முருகப் பெருமானின் அருளையும் தரிசனத்தையும் பெறுவதற்கு பாடப்பட்டு வரும் பாடலாக கந்தசஷ்டி கவசம் உள்ளது. மனதை ஒரு நிலைப்படுத்தி, தினமும் கந்தசஷ்டி கவசம் பாடலை படித்தால் வேண்டியது அனைத்தும் கிடைக்கும். முருகன் அருள் துணையாக இருக்கும்.

முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு எத்தனையோ மந்திரங்கள், பாடல்கள் இருந்தாலும் அவற்றில் முதன்மையானதாக பக்தர்களால் கருதப்படுவது கந்தசஷ்டி கவசம் தான். 

கந்தசஷ்டி கவசம் பாலதேவராயன் சுவாமிகளால் இயற்றப்பட்டதாகும். அவர் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் ஆறு கவசப் பாடல்களை இயற்றி உள்ளார். அவற்றில் இன்று பலராலும் பாடப்படும், "சஷ்டியை நோக்க சரவண பவனார்" என துவங்கும் கவசப் பாடல் திருச்செந்தூர் தலத்திற்கு உரியதாகும்.

கந்தசஷ்டி கவசம் மொத்தம் 235 வரிகள் கொண்டது. கடைசியாக வரும் போற்றி உடன் சேர்த்து சொன்னால் 238 வரிகள் கொண்டதாகும். 

கந்தசஷ்டி கவசத்திற்கு இணையான பாடல் :

பொதுவாக முருகப் பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள் கந்தசஷ்டி கவசம் படிப்பது மிகவும் விசேஷம். அதே போல் சஷ்டி விரதம் இருப்பவர்கள் கந்தபுராணம் முழுவதையும் படிக்க வேண்டும் என்பது நியதி. 

அப்படி கந்தசஷ்டி கவசத்தையோ அல்லது கந்தபுராணத்தையும் படிக்க முடியாதவர்கள், "முதல்வன் புராண முடிப்பு" என்ற பாடல் தொகுப்பை பாராயணம் செய்யலாம். 

இது முருகப் பெருமானின் அருளை பெறுவதற்காக பாம்பன் சுவாமிகள் இயற்றிய 10 பாடல்கள் ஆகும். வேண்டியது அனைத்தையும் தரும் இந்த பாடலை எவர் ஒருவர் படித்தாலும் கந்தசஷ்டி கவசம் படித்ததற்கு இணையான பலன் கிடைக்கும்.

முதல்வன் புராண முடிப்பு :

சந்திர சேகரன் தழற்கண்ணே பொறி
வந்தன வாறவை மாசில் கங்கைசார்ந்து
ஐந்துடன் ஒன்றுஅணை குழவி ஆகிஆறு
அந்தநன் மாதர்கள் அமுதம் உண்டவே (1)

உண்டவை பலபல உருவங் காட்டுபு
பண்டுமை யாலொரு படிவ மாய்அவன்
கண்டென அருத்தமுது உண்டு காமர்செய்
அண்டஒண் கயிலைசென்று அடல் செய்யுமால் (2)

ஆடலில் வெஞ்சுவர் அசுவம் ஏறியது
ஈடணை அம்புலி இரதம் ஊர்ந்தது
மூடமில் இந்திரன் முதலி னோர்கரி
சேடனை ஊர்ந்தது செம்பொற் சேயரோ (3)

செங்க ருடன்புலி சீயம் ஓதிமம்
சங்குறழ் ஏறுழை சரபம் ஆடிஇவர்ந்து
எங்கணும் ஏகியது எழில்கொள் எந்நில
மங்கைய ரும்விழை மகிமைப் பிள்ளையே (4)

பிள்ளைமை நீத்தொரு பெருவ யோதிகம்
உள்ளவ னாய்ச்சுரர் உலகை நன்குசெய்
உள்ளம்டு அங்ஙனம் உலாவி னான்வன
நள்ளிடன் அடைந்துகின் னரஞ்செய் தானவன் (5)

செய்யதன் ஓசையிற் சேர்வி லங்குபுள்
மெய்யைம றந்தன வேய்ங்குழ ற்தொனி
ஐயன்எ ழுப்பினன் அகல்உண் மாதர்கள்
மையல்செய் விரகமுள் வருந்த நாளுமே (6)

மேலடர் அண்டமும் மேய சேயவன்
மாலுடல் வரையிடை வந்து வானவர்
பாலுறு வலிகளைப் பாறச் செய்துதன்
வாலிருந் தைவத வடிவு காட்டினான் (7)

காட்டலும் சதமகன் கடவு ளேஎமை
வாட்டொரு சூரனை மடித்துக் காவெனக்
கேட்டவன் அஞ்சல்மின் கிருபை செய்துமென்று
ஆட்டரன் பாற்படை அரசை வாங்கினான் (8)

வாங்கிமற் கணத்தொடு மகிவந் தோதியும்
வீங்குமெய்க் கயமுகன் தனையும் வீட்டுபு
பாங்குடைச் சிங்கனும் பானு கோபனும்
னீங்கிடக் கண்டவர் நிருபற் கீண்டனன் (9)

கீளவைப் பரிகொடி யாய்க்கி ளர்ந்தன
ஆளொரு வரையடைந்து அருணை யான்புகழ்
வாளன கண்ணியை மணந்து விண்புரந்து
ஆளெயில் மான்மணந் தான்ச யம்புவே (10)

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top