போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இவ்வுலகில் வெற்றி பெறுவது பெரும் சவாலாகவே உள்ளது. அதே சமயத்தில் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் அதை வெற்றி கொள்ளும் நபர்களை பார்க்கும்போது இவர்களால் இது இப்படி சாத்தியம் என்று பொறாமை கொள்ளவே செய்கிறது மனது.
வெற்றி பெற்றவர்களின் வழிகளை அறிந்து அவ்வழியே செல்பவர்களும் உண்டு. வெற்றி பெற்றவர்களின் சூட்சம ரகசியங்களை கண்டறிந்து ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்பவர்களும் உண்டு.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சூட்சும ரகசியங்கள் இருக்கும். சிலருக்கு பஞ்சாங்கத்தின் ஐந்து கூறுகளான வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்தில் ஏதேனும் ஒன்று சக்தி பெற்ற ஆற்றலாக இருப்பதன் மூலம் வாழ்க்கையில் வெற்றியை பெற்றிருப்பார்கள்.
பஞ்சாங்கத்தில் வாரம், திதி, கரணம், நட்சத்திரம் பற்றி ஓரளவிற்கு அறிந்து வைத்திருப்பார்கள். மேலும், யோகங்களில் சித்தயோகம், அமிர்தயோகம், மரணயோகம் பற்றி சிலர் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் நாமயோகம் குறித்து வெகுசிலரே அறிந்து வைத்திருப்பார்கள். காரணம் யோகங்களில் நாமயோகம் முற்றிலும் வேறானது.
ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நட்சத்திரத்தின் பாகையிலிருந்து, சந்திரன் வீற்றிருக்கும் நட்சத்திரத்தின் பாகை வரையிலான இடைவெளியை கணக்கிட்டு தான் நாம யோகத்தை கணிக்கிறார்கள்.
ஒருவர் எந்த நாமயோகத்தில் பிறந்துள்ளார் என்பதைப் பொறுத்து, அவர்கள் இந்த ஜென்மத்தில் தற்போது எவ்வாறு இருக்கிறார்களோ அதேபோல அந்த நிலையை அடிப்படையாகக் கொண்டு கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்றையும் இந்த நாமயோகங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மொத்தம் 27 வகையான நாமயோகங்கள் இருக்கின்றன. இந்த 27 நாமயோகங்களில் சுப நாம யோகங்களும், அசுப நாம யோகங்களும் இருக்கின்றன. இதில் நீங்கள் சுப நாம யோகத்தில் பிறந்தால் அதற்கான பலனையும், அசுப நாம யோகத்தில் பிறந்தால் உங்களுக்கான கர்மவினைகளை கழிப்பதற்கான பலன்களையும் பெறுகிறீர்கள்.
சுப நாம யோகம் :
ப்ரீதி
ஆயுஷ்மான்
செளபாக்யம்
சோபனம்
சுகர்மம்
விருத்தி
துருவம்
ஹர்ஷணம்
வஜ்ரம்
சித்தி
வரீயான்
பரிகம்
சிவம்
சித்தம்
சாத்தியம்
சுபம்
சுப்பிரம்
பிராம்மியம்
ஐந்திரம்
அசுப நாம யோகம்
விஷ்கம்பம்
அதிகண்டம்
திருதி
சூலம்
கண்டம்
வ்யாகதம்
வியதீபாதம்
வைதிருதி
உங்களுக்கு ஜாதகரீதியாக பரிகாரங்களை மேற்கொண்ட பிறகும், எதிர்பார்த்த அளவுக்கு பலன்கள் கிடைக்கவில்லை என்றால், ஆயுஷ்மான் நாமயோகம் கொண்டவரை தொடர்ச்சியாக வணங்குவதன் மூலம் மிகப்பெரிய பலனை பெறலாம்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்புபவர்கள், அவர்கள் ஜென்ம நட்சத்திரமும், ஆயுஷ்மான் நாம யோகமும் வரும் தினத்தில் மகான்களை சந்தித்து ஆசி பெறலாம்.
பெண்களாக இருந்தால் சௌபாக்கியம் நாம யோகத்தில் பிறந்திருக்கும் பெண்மணிகளிடம் ஆசி பெறலாம்.