பௌர்ணமி ஒவ்வொரு மாதமும் வரும். இதனால்தான் இது தனி சிறப்பை பெற்றுள்ளது. தை மாத பௌர்ணமி ரொம்பவே விசேஷமானது. இதுபோல மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியும் விசேஷமானது தான்.
ஏனெனில் அன்றுதான் மாசி மகமும் கொண்டாடப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டில் மாசி மாதத்தில் பௌர்ணமி எப்போது வருகிறது அதற்குரிய நேரம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மாசி மாதம் பௌர்ணமி 2025 தேதி மற்றும் நேரம்:
2025 ஆம் ஆண்டின் மாசி மாத பௌர்ணமியானது மார்ச் 13 ஆம் தேதி வியாழன் கிழமை வருகிறது.
திதி நேரம் : 13 மார்ச் 2025 வியாழன் கிழமை காலை 10:36 மணிக்கு முழு நிலவு தொடங்கி 14 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை மதியம் 12:24 மணிக்கு முழு நிலவு முடிவடையும்.
மாசி மாதம் பௌர்ணமியின் 2025 முக்கியத்துவம்:
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தான் தோன்றும். அந்த வகையில், இந்த ஆண்டு மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியானது மிகவும் விசேஷமானது. ஏனெனில் இம்மாதத்தில் வரும் மாக நட்சத்திரம் அன்று தான் பௌர்ணமி திதியும் தோன்றுகின்றது.
எனவே பௌர்ணமி நாளில் சிவபெருமானை முழு மனதுடன் வழிபடுவது மட்டுமின்றி விநாயகர் வழிபடுவது மிகவும் சிறப்பு. மேலும் பூர நட்சத்திரத்தில் பௌர்ணமி இருப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
மாசி மாத பௌர்ணமி 2025 அன்று என்ன செய்ய வேண்டும்?
இந்த 2025 ஆண்டு மாசி மாத பௌர்ணமியானது தொடங்கி வெள்ளிக்கிழமை முடிவதால், பௌர்ணமி அன்று அதிகாலையிலேயே எழுந்து பூஜை செய்து சிவன் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்துவிட்டு வழிபட வேண்டும். அதுபோல விநாயகருக்கும் அர்ச்சனை செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு.
அதுபோல வெள்ளிக்கிழமை அன்று பூர நட்சத்திரம் வருகிறது. மேலும் மதியம் வரை பௌர்ணமி இருப்பதால் வெள்ளிக்கிழமையும் காலையில் எழுந்து கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அம்பாளுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், வீட்டிலேயே சிவபெருமானின் உருவப்படத்திற்கு பால் அல்லது பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வழிபடுங்கள். முக்கியமாக பௌர்ணமி நாளில் பார்வதி மற்றும் சிவன் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் வீட்டில் சுபிட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பார்வதி தேவி பௌர்ணமி மாசி அன்றுதான் அவதரித்தார் என்பதால், பௌர்ணமி முடியும் நாளில் வீட்டில் தீபம் ஏற்றி, தேவிக்கு இனிப்புகள் மற்றும் பழங்கள் வைத்து பூஜை செய்யுங்கள்.
மாசி மாத பௌர்ணமி 2025 வழிபாடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
- மாசி மாத பௌர்ணமி அன்று விரதம் இருந்தது வழிபட்டால் கருமங்கள் அந்த நொடியே நீங்கும் என்பது ஐதீகம்.
- இந்த பிறவிக்கு பிறகு இனி பிறவா நிலை கிடைக்கும்.
- எல்லா துறைகளிலும் இருப்பவர்கள் மாசி பௌர்ணமி கிரிவலம் சென்று வழிபட்டால் அதிக பலன்கள் பெறலாம்
- கணவனை பிரிந்து இருப்பவர்கள் மாசி மாத பௌர்ணமி விரதம் இருந்து வழிபட்டால் கணவனுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் உண்டாகும்.
- கடன் தொல்லையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் மாசி பௌர்ணமி கிரிவலம் சென்று சிவனை வழிபட்டால் விரைவில் பிரச்சனை தீரும்.