2025 ஸ்ரீ ராமநவமி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 2025 ஸ்ரீ ராமநவமி பற்றிய சிறப்பு பதிவுகள் :

ஸ்ரீ ராமநவமி என்பது ஒரு முக்கியமான பண்டிகையாகும். இது ஐதீக புராணங்களின்படி, இஷ்வாகு வம்சத்திலிருந்து வந்த ராஜரிஷி தசரதருக்கும், அவருடைய மூத்த மனைவி கௌசல்யாவிற்கும் பிறந்த ஸ்ரீ இராம பகவானின் ஜென்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

2025 சிறப்பு அம்சம் :

2025-ம் ஆண்டு ராமநவமி ஞாயிற்றுக்கிழமையன்று வருகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, ஏனெனில் ஞாயிறு பகவான் ஸூரியனுக்கு உரியது. ஸ்ரீராமர் சூரிய குலத்தில் பிறந்தவர் என்பதால் இது மேலும் புனிதமான நாளாக கருதப்படும்.

2025 ஆம் ஆண்டு ராமநவமி தேதி:

தேதி: ஏப்ரல் 6, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

நவமி திதி ஆரம்பம்: ஏப்ரல் 5, 2025 – மாலை 07:26 மணி

நவமி திதி முடிவு: ஏப்ரல் 6, 2025 – மாலை 07:23 மணி

மத்யான ராமநவமி பூஜை முகூர்த்தம்: ஏப்ரல் 6, 2025 – காலை 11:00 மணி முதல் 1:30 மணி வரை

(இது ஓம் நமசிவாய அறக்கட்டளையின் குமரி பஞ்சாங்கம் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.)

ராமநவமியின் முக்கியத்துவம்

1. அவதார தினம்: ஸ்ரீராமர், ஒரு தெய்வீக அவதாரம். இவர் தர்மத்துக்காக வாழ்ந்த ஒரே மனிதர். இந்நாளில் அவரது பிறப்பு நாடகம், பூஜைகள், பஜனைகள் நடத்தப்படுகின்றன.

2. ராமாயணம் பாராயணம்: வால்மீகி ராமாயணத்தையோ அல்லது கம்பராமாயணத்தையோ வாசிப்பது ஒரு வழிபாட்டு முறையாக உள்ளது.

3. தீர்த்தயாத்திரைகள்: அயோத்தியா, ராமேஸ்வரம் போன்ற ஸ்ரீ ராமருடன் தொடர்புடைய தலங்களில் பெரிய திருவிழாக்கள் நடைபெறும்.

4. பஜனை மற்றும் கீர்த்தனைகள்: ஸ்ரீராமனின் புகழ்களைப் பாடும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பஜனை மடங்களில் இரவு முழுவதும் பாடல்கள் ஓங்கும்.

வழிபாட்டு முறைகள்

வீட்டில் ஸ்ரீராமரின் திருவுருவ படத்தை அலங்கரித்து பூஜை செய்கின்றனர்.

பஞ்சாமிர்தம், பானகம், வதபருப்பு போன்ற நெய்வேத்தியங்கள் படைக்கின்றனர்.

கதை வாசிப்பு, ராம நாம ஜபம், கீர்த்தனை ஆகியவை நடத்தப்படுகின்றன.

சிலர் ராமாயண பாராயணம் முழுவதையும் இந்நாளில் முடிப்பதும் உண்டு.

நற்செய்தி

ஸ்ரீராமரின் வாழ்வும், வேதாந்த தத்துவமும் உண்மையை நிலைநிறுத்தும் ஒரு உன்னத வழிகாட்டியாக இருக்கிறது. தர்மம், சகிப்புத்தன்மை, அன்பு, இரக்கம் போன்றது அவருடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள். அதையே நாம் நம் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஓம் ஸ்ரீ ராமஜெயம்
ஜெய் ஸ்ரீராம்!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top