அபிஜித் நட்சத்திரம் குறித்து நமது ஓம் நமசிவாய குழுவின் சிறு  பதிப்புகள் :

ஆரம்ப காலகட்டத்தில் மொத்தம் 28 நட்சத்திரங்கள் உள்ளதாகவும் அதில் 21 ஆவது நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரம் உள்ளதாகவும் சில வரலாற்று குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

 இது மிகவும் பிரதானமான நட்சத்திரமாகும். அதன் பலன் காலச்சக்கரத்தையே சுழற்றும் அளவிற்கு சக்தி கொண்டது.

அபிஜித் நட்சத்திரம் என்பது ஒரு தனி நட்சத்திரமாக இருந்தாலும் உத்திராடம் நட்சத்திரத்தில் கடைசி  மூன்று (2, 3, 4) பாதங்களையும் திருவோணம் நட்சத்திரத்தில் முதல் பாதத்தையும் கொண்டுள்ளது.

 அபிஜித் என்னும் சமஸ்கிருத வார்த்தை தமிழில் "வெற்றிகரமான" அல்லது "தோற்கடிக்க முடியாத" என்று பொருள்படும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர் எந்த குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களது ராசி அதிபதியாக சந்திரன் வீட்டில் இருக்கும்போது அவர் இந்த உலகமே போற்றும் வகையில் பெரிய மாமனிதனாக மாற்றக்கூடிய சக்தி இந்த அபிஜித் நட்சத்திரத்திற்கு உண்டு.

 மேலும் இவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பார்.


ஓம் நமசிவாய
Tags :

Abijith , nachathiram, star ,abhijith , jathagam

Post a Comment

Previous Post Next Post