நடராச பெருமானின் வலது காலில் மிதித்து அமுக்கியிருக்கும் அசுரன் யார்

0

நடராச பெருமானின் வலது காலில் மிதித்து அமுக்கியிருக்கும் அந்த அசுரன் யார் என்பதை பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிப்பு :

நடராஜ பெருமான் தனதுவலது காலை முயலகன் என்பவன் மீது வைத்து  இருக்கிறது. இவனை, அபஸ்மாரன் என்றும் அழைப்பர்.

 இவன் வளைந்து நெளிந்து, அஷ்ட கோணலாகப் படுத்திருப்பான். "அபஸ்மாரம்' என்றால், "வளைந்து நெளிதல்' என்று பொருள்.

 காக்கா வலிப்பு நோய் வந்தவர்களுக்கு  கையும், காலும் இழுத்து, எந்த நிலையில் தரையில் கிடப்பாரோ, அப்படி ஒரு நிலையில் முயலகன் படுத்திரருப்பான். முசலகம் என்றால், "காக்கா வலிப்பு!'  இதனால்,அவன், "முசலகன்'  என்றாகி, தமிழில் முயலகன் ஆனான்.

திருப்பராய்த்துறை என்ற தாருகாவனத்தில் 48 ஆயிரம் ரிஷிகள் தங்கள் பத்தினிகளோடு வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் வேள்விகள் பல நடத்தி பல்வேறு சக்திகள் பெற்றனர். இதனால் அவர்களுக்கு ஆணவம் மிகுதியானது.

இந்த ஆணவத்தை அடக்கிட சிவபெருமான் திருவுளம் கொண்டு  பிச்சாடனார் வேடம் எடுத்து வந்தார்.

இந்த பிச்சாடனை அழிக்க ஆபிசார என்ற வேள்வியை முனிவர்கள் நடத்தினர்.
அந்த வேள்வியிலிருந்து  புலி,யானை போன்ற விலங்குகள் வெளிப்பட்டன.

இதனை பிச்சாடனார் வேடம் கொண்ட சிவபெருமான் அவற்றை கொன்று அதன் தோலை உடுத்திக்கொண்டார்.

மான், மழுவை கையில் ஏந்திக்கொண்டார். முயலகன் என்ற அரக்கனை போரிட்டு வென்று தன் காலடியில் மிதித்து நடனமாடினார்.

தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்கி இறைவன் ஒருவனே என்பதை சிவபெருமான் உணர்த்தினார்.

ஆகையால், இந்த முயலகன்  ஆணவத்தைக் குறிப்பவனாகிறான். எனவே மனிதர்கள் தன்னிடமுள்ள அகங்காரத்தை நடராஜர் காலில் இட்டு மிதித்திருப்பது போல் தனக்குள் புதைத்துக் கொன்டு அடியோடு அழித்து விட  வேண்டும்.

அதை, வெளியே காட்ட அனுமதிக்கவே கூடாது என்பதை இந்த தத்துவம் உணர்த்துகிறது.

ஓம் நமசிவாய
Tags :

Nadaragan , nadaraja , raja , asuran , valathu kaal . muyalagan , moyalagan , abasmaaran , abasmaran , abaasmaran

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top