வீரபத்திரரின் சிறப்பும் மற்றும் அவதார நோக்கம்

0

வீரபத்திரரின் சிறப்பும் மற்றும் அவதார 

நோக்கம் குறித்தும் நமது ஓம் நமசிவாய 

குழுவின் மூலம் சிறு குறிப்புகள் :

வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.

சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சன் சிவனை மதிக்காமல் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமல் யாகத்தை நிகழ்த்தினான்.

நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் ( பார்வதி) மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவம் ஆடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தட்சனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறுகிறது.

வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர்.
 தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார். நமது ஓம் நமசிவாய குழுவிற்கு கிடைத்த தகவல் படி  தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, சென்னையிலுள்ள மயிலாப்பூர், தாராசுரம், கும்பகோணம், திருக்கடவூர் போன்ற இடங்களிலும், இலங்கை யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கல்வியங்காடு, வியாபாரிமூலை, தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகால்பட்டு ஆகிய இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.

ஓம் நமசிவாய
Tags :

VeeraBathra , Veera Bathrar History , veerapatra avatharam , verapathiran

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top