மாயை

0

மாயை என்றால் என்ன என்பது பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு தகவல்கள் :





நமச்சிவாய வாழ்க...!

பல பிறவிகளை கடந்து இன்று நாம் எல்லோரும் மனிதர்களாக பிறந்துள்ளோம்.

பலபிறவிகளை ஏன் எடுத்தோம் என்றும், இனி வரும் பிறவிகளை எப்படி தடுப்பதென்றும் பிறப்பறுக்கும் கருணை கடலான சிவபெருமான் திருவடியை சென்றடைவதே இப்பிறவியின் நோக்கம் என்பதை உணரத்தான் மனிதனாக பிறப்பெடுத்திருக்கிறோம் என்பதை எப்போது உணர்கிறோமே அப்போதுதான் நம்மை சுழ்ந்துள்ள மாயை நம்மை விட்டு விலகும்.

மாயை என்றால் என்ன? என்பதைப் பற்றியும் அதை எப்படி கண்டுகொள்வது? எனபதைப் பற்றியும் நமது ஓம் நமசிவாய குழுவில் தெரிந்து கொள்ளலாம்.

மிக மிக எளிமையாக சொல்லவேண்டுமென்றால்..... "சிவத்தைத்தவிர, நம்மை சூழ்ந்துள்ள எல்லாமே மாயைதான்"

சிவத்தை உணரவிடாமல் தடுப்பது மாயை.
சிவத்தை சிந்தையில் நிற்கவிடாமல் அங்கும் இங்கும் நம் மனதை ஓட வைக்கும் சிந்தனைகள் யாவுமே மாயை.

திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் செலவுக்கு காசு இருக்காது. அந்த காசுதான் மாயை.

ஈசன் மேலுல்ல அன்பினால் திருநீரு பூசுவோம். நம் சுற்றத்தார் நம்மை கேலி செய்வார்கள். இந்த சுற்றத்தார்தான் மாயை.

இதையும் மீறி ஈசன்மேல் கொண்ட அன்பினால் நம்மை எல்லோரும் சிவனடியார் என்று புகழ்வர். ஒரு காலகட்டத்தில் நமக்கே தெரியாமல், ஈசன்மேல் உள்ள அன்பு குறைந்து, பலர் நம்மை சிவனடியார் என்று புகழ்வதர்க்காகவே நாம் ஈசனை வழிபடுவோம். அந்த புகழ்தான் மாயை.

சிவபெருமானை நினைக்கவும், வணங்கவும், வழிபடவும் தடையாக உள்ளது தான் மாயை என்னும் கண்களுக்கு புலப்படாத அசுரன்.
இந்த அசுரனை அழிக்கவும், நம்மை காக்கவும், முத்திநெறி அறிவிக்கவும் வல்ல ஒரே இறைவன், நம் சிவபெருமான் மட்டுமே.

சிவனை வணங்குவோரை
நாள் என் செய்யும்?
கோள் என் செய்யும்?
கொடுங்கூற்று என் செய்யும்?
சிவபெருமானை தோழனாக கொண்டவனுக்கு துன்பம் என்பது கணவிலும் வராது. சிவத்தை நினைந்து வாழ்வோம். சிவனடி சேர்வோம்.

ஓம் நமசிவாய





Tags :

maayai , mayai , mayam , aasai , maayam

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top