விளக்கின் நவகிரஹ தத்துவம் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு குறிப்புகள் :
விளக்கு என்பது நாம் அன்றாடம் வாழ்வில் பூஜிக்க கூடிய பூஜைப் பொருள்களில் ஒன்று.
• ஒரு விளக்கு என்பது சூரிய பகவானைக் குறிக்கும்.
• விளக்கில் தீபம் எரிவதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் அல்லது நெய் போன்ற திரவம் சந்திர பகவானைக் குறிக்கும்.
• விளக்கில் போடப்படுகின்ற திரி புதன் பகவானைக் குறிக்கும்.
• விளக்கில் எரியும் சுடர் செவ்வாய் பகவானைக் குறிக்கும்.
• விளக்கில் எரியும் சுடரின் நிழல் ராகு பகவானைக் குறிக்கும்.
• விளக்கில் எரியும் சுடரில் உள்ள மஞ்சள் நிறம் குரு பகவானைக் குறிக்கும்.
• சுடரின் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி சனி பகவானைக் குறிக்கும்.
• சுடரின் வெளிச்சம் கேது பகவானைக் குறிக்கும்.
• விளக்கில் எரிந்துக் கொண்டிருக்கக் கூடிய திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது சுக்கிர பகவானைக் (ஆசை) குறிக்கும்.
ஆசைகள் நம்மை அழிக்கிறது ;
மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.
இதுவே தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்
ஓம் நமசிவாய
Tags :
Velaku , navagragam , navakragam , thathuvam