தினமும் காலையில்  துயில் எழுந்தவுடன் கூற வேண்டிய மந்திரம் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் சிறு பதிப்புகள் :

தினமும்  காலையில் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடமாவது நிதாமாக அமர்வது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை  விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் செல்ல வேண்டும்.

ஓம் கராக்ரே வஸதே லக்ஷ்மீ

கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது 

கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்


அன்றைய நாள் முழுவதும் நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி.

இந்த மந்திரத்தை தினமும் ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் :

கிழக்கு நோக்கி ஜபித்தால் நம்மை நோய்கள் அண்டாது.

தெற்கு நோக்கி ஜபித்தால் வசியம், சூனியம் போன்றவை  நம்மை அண்டாது.

தென்கிழக்கு நோக்கி ஜபித்தால் கடன் போன்ற பிரச்சனைகள் தீரும்.

மேற்கு நோக்கி ஜபித்தால் பகைகள் தீரும்.

அனைவரும் இறைவன் அருள் பெற்று இன்புற்று வாழ ஓம் நமசிவாய ஆன்மீக குழு மூலம் இறைவனை பிராத்திக்கின்றோம்.

ஓம் நமசிவாய
Tags :

manndram , mandrams

Post a Comment

Previous Post Next Post