கோலம் உணர்த்தும் தத்துவம்

0

கோலம் உணர்த்தும் தத்துவம் குறித்து நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் சிறு பதிப்புகள் :
எளிமையான ஜீவன்களுக்கும், எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கும் நாம் பரோபகாரம் காட்ட வேண்டும் என்பதே மாக்கோலம்.

வாழ்க்கை என்பது நெழிவு, சுழிவுகள் நிறைந்த நிதானமான, அமைதியான சதா ஆண்டவன் நினைவோடு இருந்து புள்ளிகளான கஷ்டங்களைக் கடந்துப் போனால் பூர்ணத்துவமான வாழ்க்கை அமையும் என்பதைக் காட்டுவதே கோலம்.

கோலம் என்பது இந்து கலாச்சார முறைப்படி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாரம்பரிய சடங்கு முறையாகும்.

கோலம் என்பது அமாவாசை தினத்தைத் தவிர பிற அனைத்து நாட்களிலும் வீடு மற்றும் கோயில்களில் போடப்பட வேண்டும்.

வீட்டு வாசலில் கோலம் போடுவது என்பது மஹாலட்சுமியையும்,  முப்பத்துமுக்கோடி தேவர்களையும் வரவேற்கிறோம் என்று பொருள்.

எத்தகைய சக்தியாக இருந்தாலும் அவற்றை ஒரு கோலத்தில் கட்டுப்படுத்த முடியும் என்கிறது மாந்திரீகம்.

வீட்டில், வாசல் ( மஞ்சள் அல்லது மாட்டுச்சாணத்தை தண்ணீரில் கலக்கி ) தெளித்து கோலம் போட்டப் பின்னரே விளக்கு ஏற்ற வேண்டும் என்கிறது தாந்திரீகம்.

மேலும் விளக்கு ஏற்றும் முறையும் அது உணர்த்தும் தத்துவம் குறித்தும் நமது ஓம் நமசிவாய குழுவின் அடுத்தப் பதிப்பில் பதிவிடுகிறோம்.

இதுப்போன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

ஓம் நமசிவாய
Tags :

Kolam , thathuvam

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top