வீட்டில் விளக்கு ஏற்றும் முறை

7

வீட்டில் விளக்கு ஏற்றும் முறைக் குறித்து நமது ஓம் நமசிவாய குறித்து மூலம் சிறு பதிப்புகள் :• விளக்கில் தாமரைப் போன்ற பீடம் - பிரம்மா,
• நடுத்தண்டு - மஹாவிஷ்னு,
• நெய் எரியும் அகல் - சிவன்,
• தீபம் - திருமகள்,
• சுடர் - கலைமகள்,
• திரி - தியாகம்.

பெண்மைக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம் மற்றும் பொறுமை போன்ற ஐந்து குணங்களே குத்துவிளக்கின் ஐந்து முகங்கள்.

விளக்கு என்பது நமது இந்து கலாச்சார முறைப்படி நம் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது அந்த வீட்டின் மஹாலட்சுமி தான் ஏற்ற வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு  முன்னுரிமை.

விளக்கு ஏற்றுவது என்பது, 


• காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலும்,
• மாலையில் சூரிய மறைவிற்கு முன்பாகவும் ஏற்ற வேண்டும்.
• சிறப்பு பூஜைகள் என்றால் முதலில் விளக்கு ஏற்றி விட்டுத்தான் பூஜையை தொடங்க வேண்டும்.

ஒரு திரியை மட்டும் வைத்து விளக்கேற்றக் கூடாது. இரண்டு திரிகள் அல்லது ஒரு திரியினை இரண்டாகப் பிரித்து அதை விளக்கின் இரு பக்கங்களிலும் வைத்து எரியும் சுடர் பகுதி மட்டும் ஒன்றோடோன்று இணைந்திருக்க வேண்டும்.

பொதுவாக விளக்கில் இரு தீபம் ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைப் பார்த்தவாறு இருத்தல் வேண்டும்.

விளக்கு என்பது தேவியின் அவதாரம் என்பதால் விளக்கில் எப்போதும் சந்தனம் மற்றும் குங்குமம் அணிந்திருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு :


• விளக்கினை பூமியில் (தரையில்) படும்படி வைத்து பூஜிக்கக் கூடாது.

• சேதாரமான விளக்கினை பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது.

• பெண்களைத் தவிர வேறு யாரும் விளக்கை அணைக்கக் கூடாது.

• விளக்கை தானாக அணையவிடக் கூடாது. பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை வைத்து மட்டுமே விளக்கை அணைக்க வேண்டும்.

இதுப்போன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

ஓம் நமசிவாய
Tags :

Veedu , veethil , velaku , murai

Post a Comment

7 Comments
Post a Comment
To Top